மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. ரத்னகிரி பகுதியிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. தற்போது நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள சிப்லானில் மக்கள் நடமாடும் பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 8 அடி நீள முதலை ஒன்று உயிருடன் கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அச்சத்தால் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை பத்திரமாக கால்வாயிலிருந்து மீட்டார்கள். வெள்ளம் ஏற்பட்டபோது அருகே இருக்கும் வஷித்ரி நதியிலிருந்து இந்த முதலை இந்த பகுதிக்குள் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது இந்த முதலை ஆற்றில் விடப்பட்டு விட்டது. ஆனாலும் இது கால்வாயினுள் கிடந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.