தர்மநெறி மறந்த கொள்ளைக்காரர்கள்!

உள்ளூர் செய்திகள் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
batteryca - 2026
கோப்பு படம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கண்ட காட்சி. வயோதிகர்களை நடக்க இயலாதவர்களை பிளாட்பாரங்களில் பேட்டரி கார் மூலம் கூட்டி செல்லும் வசதி உள்ளது.

ஒரு ஆளுக்கு 10 ரூபாய் தான் வாங்க வேண்டும். ஆனால் நடக்க முடியாமல் நடந்து வந்த வயதான தாத்தாவிடம் 100 ரூபாய் கொடுக்கணும் என்று அடவடியாக வசூலித்து கொண்டிருந்தார் பேட்டரி கார் ஆபரேட்டர்.

அந்த வயோதிகர் உடன் வந்த பாட்டி அதிர்ச்சி ஆகி விட்டார். ஒரே பிளாட்பாரம் 9 கம்பர்ட்மெண்ட் தாண்டனும். நீ என்ன 5 கிமீ., வண்டி ஓட்டவா போற?! நடக்க முடியாததால தானே கேக்கறோம் என்கிறார்.

அந்த பேட்டரி கார் ஆப்பரேட்டர் கறாராக 100 ரூபாய் கேட்டு கொண்டிருக்க இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நடக்க தொடங்கி விட்டனர்.

அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைப்பதே தொழில் என்று ஆழ் மனதில் பதிந்து போயிருக்கிறது இவர்களுக்கு. கேட்டால் தமிழன் என்று பீற்றிக் கொள்வார்கள்.

அரசே பத்து ரூபாய் வாங்க சொன்னால் இவன் 100 குடு என்று வழிப்பறி செய்து கொள்ளை அடிக்கிறான். ரயில்வே நிர்வாகம்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– வி.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.