spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவந்தே பாரத் Vs வைகை ; நடப்பியலும் அரசியலும்!

வந்தே பாரத் Vs வைகை ; நடப்பியலும் அரசியலும்!

- Advertisement -
vaigai vs vandebharat

வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டது என்ற அரசியல் கருத்துகள், கடந்த 10 தினங்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து பல்வேறு கருத்துக்களும் அரசியல் மட்டத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மை நிலவரம் என்ன? இது குறித்து சமூக வலைதள பக்கங்களில் பலர் கருத்துக்களை எழுதி வருகின்றனர். அவற்றில் ஓர் இரு கருத்துகள் இங்கே..


இங்கே இணையத்தில் கடந்த பத்து நாட்களாக வந்தேபாரத் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரம் குறித்து குற்றச்சாட்டுக்களும் விவாதங்களும் நடந்து வருகிறது. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை பார்ப்போம்.

வைகை எக்ஸ்பிரஸ் LHB வகை பெட்டிகளுடன் இப்போது காலை 6.40 மணிக்கு மதுரையில் கிளம்பி மதியம் 2.15 மணிக்கு எக்மூர் சென்றடைகிறது. இந்த சூப்பர் பாஸ்ட் ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடம்.
அடுத்து வந்தே பாரத் காலை 7.55 க்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை அடைகிறது. இதன் பயண நேரம் 5 மணி 55 நிமிடம். செங்கல்பட்டு அருகே நேர மாற்றத்திற்கு முன்பும் இப்போதும் வைகை ஓரம் கட்டப்பட்டு வந்தேபாரத் முந்தி செல்கிறது.

காரணம்.இன்றி வைகையில் பயண நேரத்தை அரை மணி நேரம் அதிகரிக்கும் போது வந்தேபாரத்துக்கு முன்பே வைகை எக்மூர் நிலையத்தை அடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
சாதாரணமாக சென்னை மதுரை இடையே பயண நேரம் 7 மணிகள் மட்டுமே. இந்தப் பாதையில் அனுமதிக்கப்பட்ட அதிக வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் ஆகும். வந்தேபாரத் தேஜஸ் துவங்கி இந்தப் பாதையில் இப்போது ஓடும் ஒரே சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலான கொல்லம் 16101 வண்டி வரை இந்த வேகத்தில் தான் இயக்கப்படுகிறது.
அதிலும் மாலை 5 மணிக்கு எழும்பூரில் கிளம்பும் இந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் 12 மணிக்கு மதுரையை மிகக்குறைந்த 7 மணி நேரத்தில் அடைகிறது.

இத்தனைக்கும் இது சூப்பர் பாஸ்ட் வண்டி அல்ல. பழைய ICF வகை பெட்டிகளைக் கொண்டுதான் இயங்குகிறது.
இந்தப் பாதையில் என்ன அதி நவீன வகை வண்டிகளை செலுத்தினாலும் 110 கிமி வேகத்தை தாண்ட முடியாது. எனவே வந்தேபாரத் வண்டியின் பவிசை காக்கிறோம் என்று சொல்லிவிட்டு மற்ற வண்டிகளின் பயண நேரத்தை அதிகரித்துவிட்டார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு என்றே தோன்றுகிறது. காரணம் இரண்டு மார்க்கங்களிலும் இரவு வண்டிகளின் பயண நேரத்தையும் சற்றே அதிகப்படுத்தி உள்ளார்கள். காரணம் வந்தேபாரத் குறைந்த நேரத்தில் இயக்கப்படுவதாக நம்பவைக்கத்தான்.

என்னதான் நிர்வாக வசதிக்காக வண்டிகளுக்கு இடையே சீரான இடைவெளியைப் பராமரிக்க என்று துறை ரீதியில் காரணம் சொன்னாலும் அதை யாரும் நம்பத்தயாராக இல்லை.

முழுவதும் குளிரூட்டப்பட்ட ஜெர்மனியின் LHB வகை வண்டிகளை மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் செலுத்த முடியும். ஆனால் இந்தியாவில் இதை 160 கிமீ வரை மட்டுமே இப்போது இயக்குகிறார்கள் உதாரணம் டெல்லி ஆக்ரா இடையே இயங்கும் கதிமான் எக்ஸ்பிரஸ்.
வந்தேபாரத் 180 கிமீ வரை செல்லக்கூடியது.

ஆனால் இதுவும் அநேகமாக 130 கிமீ வேகத்தை தாண்டி இயக்க முடியாத அளவில்தான் இங்கே பாதைகள் நிலை உள்ளது.

சென்னை கன்னியாகுமரி மார்க்கத்தில் இரட்டை வழி பாதைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிந்ததும் அநேகமாக வந்தேபாரத் மற்றும் தேஜஸ் வண்டிகளின் பயண நேரம் 5 மணியாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் நல்லது நடக்கட்டும்.
-ஜீனேந்திரன் ஜைனேந்திரன்


வந்தே பாரத் – ஹிப்பொக்ரஸி

இந்திய அரசில் வேலை செய்யும் இந்திய இஞ்சினியர்கள் உருவாக்கியுள்ள இந்த ரயிலின் மேல் என்ன வன்மம் எனப் புரியவில்லை.

இன்று
பெங்களூர் – சென்னை
வந்தே பாரத் – 940 ரூ
ஷதாப்தி – 1130 ரூ
ஷதாப்தி மீது யாருக்கும் எந்த பிராதும் இல்லை. வந்தே பாரத் மீதுதான்.

வந்தே பாரத் என்றவுடன் “ஏழை” யைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள். ஏழைகள் செல்லும் ரயில் எதையாவது மாற்றியா வந்தே பாரத் ஐ விடுகிறார்கள் ? விமானத்தில் சொகுசாகப் பயணிக்கும் இந்த “ஏழைப் பங்காளர்களை” பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

ஒரு நாட்டில் அனைத்துத் தட்டு மக்களுக்கும் அவர்களால் செலவழிக்க முடியும் அளவுக்கு சேவைகளைத் தர வேண்டும்.

உயர் தட்டு மக்களுக்கு விமான சேவை உள்ளது.விமான சேவையில் போய் இந்த “ஏழை” ஒப்பாரியை வைக்க மாட்டார்கள்.

ஏற்கனவே இருக்கும் ரயில்களிலேயே 1 ஏசி , 2 டயர் , 3 டயர் எல்லாம் இருக்கிறது. வந்தே பாரத் கட்டணம் 2 டயர் ஏசியை விட குறைவுதான்.

விமானத்துக்கும் , நான் ஏசி ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பத்தான் வந்தே பாரத். இது எந்த ஒரு பிரதமருக்கும் சொந்தமானது அல்ல. நம் தேசத்தின் உருவாக்கம்.

உதாரணமாக சென்னை – பெங்களூர் விமான சேவையை எடுத்துக்கொள்வோம்.

வீடு – விமான நிலையம் – 1 மணி நேரம் , விமான நிலையத்தில் 1 மணி நேரம் , விமானத்தில் ஒரு மணி நேரம் , விமான நிலையம் – வீடு 2 மணி நேரம். ஆக மொத்தம் 5 மணி நேரம் . விலை 3000 – 9000

வந்தே பாரத்திலும் இதே நேரம் தான் ஆகும். ஆனால் விலை 940. எந்த மடையனாவது இதை எதிர்ப்பானா ?

அதே போல பெங்களூரில் மதியம் 2.40 க்கு கிளம்பி , இரவு 11.30 க்கு ஹைதராபாத் சென்றடையும் வந்தே பாரத்தும் வரப்பிரசாதம் தான். விலை ரூ 1500 /-

காரணமில்லாமல் எதிர்க்கும் இந்த வன்ம வெறியர்கள் என்ன சொன்னாலும் , அனைத்து வந்தே பாரத்தும் மக்கள் ஆதரவுடன் டிரயின்ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளன.

நம் ஆட்களுக்கு மக்கள் முன்னேறவே கூடாது.அனைவரும் ஏழைகளாகவே இருக்க வேண்டும். மூத்திர நாத்தத்தில் , இடுக்கிக்கொண்டு அமர்ந்து வியர்வை வழிய பயணிக்க வேண்டும்.
— சரவண பாண்டியன்


இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரியில் பயண நிகழ்வுகள்.

நேற்று ஊருக்கு கிளம்ப எண்ணி முகப்பேர் கிழக்கு லிருந்து தானியில் (ஆட்டோவில்)( ₹80/- ) கோயம்பேடு மெட்ரோ வந்து மெட்ரோவில் எழும்பூர்

(₹20-+20-=40-) வந்து சேர்ந்தோம் மணி மதியம் 1.20 . நெல்லையிலிருந்து வந்த இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரி முதல் நடைமேடை யில் வந்து நின்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் 14 நிமிட சுத்தம் செய்யும் புதிய நிகழ்வை செய்ய ஆயத்தம் ஆனது. இன்று முதல் இந்த பணி ஆரம்பம் ஆகின்றதாம். மிக சிறப்பாக இப்பணி ஒருங்கிணைக்கப்பட்டது.

பின்னர் 10-20 நிமிடங்களுக்கு பின் உள்ளே அனுமதித்தனர்.

C4 பெட்டி வியப்பாக இருந்தது. உள்ளே எண்ம பலகை ஒளிர்ந்து கொண்டே இருந்தது அதன் ஒலி வடிவம் தொடரியின் பயண விவரஙகளை தெரிவித்துக் கொண்டு இருந்தது. கோச் – ன் இரு எதிர் முனைகளிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டியிலும் ஒளிர்வு மட்டும் அறிவிப்புகளை ஒளி வடிவில் வெளியாகி கொண்டு இருந்தன.

சரியாக 2.50 க்கு வண்டி கிளம்பியது , தொடரி யின் பாதிப்பு ஏதும் இன்றி மென்மையான மிதவை போல மிதந்து சென்றது , வண்டியின் வேகம் (kmph) ஒளிர்ந்தது. வண்டியின் உட்புறம் நீட் & க்ளீன் ஆக ஆக ஒரு பெரு வணிக வளாக எணம திரை அரங்கம் போன்று இருந்தது. மேலிருந்து குளிர்விப்பான் மூலம் சீரான குளிர் காற்று சுற்றி உள்ள அமைப்பு வழி வீசிக் கொண்டிருந்தது. எல்.இ.டி ஒற்றை விளக்கு அதே போல சீராக குளிர்விப்பானை சுற்றி ஒளிர்ந்து கொண்டே இருந்தது. சாளரம் பெரிய கண்ணாடி வழி வெளி பகுதியை காட்டி நகர்ந்து கொண்டே இருக்க வெய்யில் நம் மீது பட்டால் அதிலிருந்து காத்து கொள்ள கண்ணாடிக்கு இணையாக ஒரு சிறு வளை போன்ற திரை மேலிருந்து கீழே இழுக்கும் வகையில் இருந்தது. சிறிது நேரத்தில்

The Hindu , தினமலர் , ஒரு லிட்டர் ரயில் நீர் பாலிதீன் பாட்டில் , வழஙகப்பட்டன. செய்தி தாளை சற்றே மேய்ந்து விட்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்தேன். அனைவருமே மகிழ்ச்சியாக காணப்பட்டனர். தன் படம் , & படங்கள் எடுத்து கொண்டும் வண்டியை புகழ்ந்தும் பேசியவாறே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஐ உருவாக்கி கொண்டும் இருந்தனர்.

மாலை 4.00 மணி வாக்கில் சிற்றுண்டி கொடுத்தனர். அவை :

ஒரு பருப்பு வடை சிறியதும் அல்லாத பெரியதும் அல்லாத ஒரு பொதுவான அளவில் (சைஸ்),

ராஜாராம்ஸ் பீநட் (கடலை மிட்டாய்) 25 கிராம்,

A2B மூங் தால் ( வருத்த பாசிபருப்பு ) 17 கிராம்,

Tombo Tomato ketchip 8 கிராம், Tropicana Guava Delight 180 மிலி டெட்ரா பேக் 1,

GranGranules instant cardamom tea mix 14 கிராம், ஒரு டீ கலக்கும் குச்சி , டிஸ்யூ பேப்பர், பின் ஒரு டம்ளர் ல் கடும் சுடுநீர் , அதில் மேற்சொன்ன டீ கரைசல் தூளை கலக்கி குடித்தோம்.

விழுப்புரம் வந்தது. பின்னர் குளிர்விப்பானின் குளிரை ஈடுகட்ட ஒரு காஃபி கேட்டேன் உடனே கொடுத்தனர்.

அதில் : UNIBIC Oats Digestive biscuits 20 கிராம்.

GranGranules beans instant coffee pre mix (Coffee Latte) 14 கிராம் + சுடு தண்ணீர்.+ ஒரு காபி கலக்கும் குச்சி , டிஸ்யூ பேப்பர், ₹20/. தனியாக காஃபி கேட்டால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

திருச்சி , திண்டுக்கல் தாண்டியதும்

இரவு சிற்றுண்டி அதில் :

சப்பாத்தி 2 எண்,

பருப்பு தால். 125 கிராம்,

பனீர் கிரேவி 100 கிராம்,

வறுத்த அரிசி சோறு 125 கிராம், (Friderice) ,

குளோப் ஜாம் 2 எண்.

தயிர் ஒரு கப் 85 கிராம்.

உண்டு முடித்ததும் , மறுபடியும் ஒரு காஃபி குடித்தேன் & ₹ 20/- .

மதுரை , விருதுநகர் தாண்டியதும் , நெல்லையை குறிப்பிட்ட நேரமான இரவு 10.50 மணிக்கு பதில் 10.30 மணிக்கே வந்து சேர்ந்தது இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரி.

தெற்கு ரயில்வே யின் மிக சிறந்த பயண வண்டி , மேற்கத்திய கழிவு அறை இந்திய கழிவு அறைகள் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவது சிறப்பு. கோச் ஐ ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ள பெரம்பூர் ரயில்பெட்டி, & லோகோ பேக்ட்டரிக்கு பாராட்டுகள்.

சாதாரண தொடரிகளிலும் இது போன்று செய்திட முயற்சிக்கலாமே !?

இறுதியாக IRCTC ஐயும் பாராட்ட வேண்டும். துல்லியமான நேர பயன்பாடு விருந்தோம்பல் அருமையாக செய்ததற்கு , வாங்கிய காசுக்கு ஏற்ற உணவு மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றை விநியோகித்தது சிறப்பு.

ஆம்னி பேருந்துகளில் சர்வ சாதாரணமாக ₹ 1500-1800 கேட்கின்றனர். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

IRCTC யும் இது போன்ற விருதோம்பல் ஐ பணம் வாங்கி அனைத்து தொடரிகளிலும் செய்து தர முயற்சிக்கலாமே…

ஆ.ரவிச்சந்திரன் து.வே.அ(ஓய்வு),
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe