Homeவீடியோகரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா

கரூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா

-

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி, ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், மூலவர் கணபதிக்கு, புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உத்ஸவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உத்ஸவர் கணபதிக்கும், ஆலய சிவாச்சாரியார், பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ விஸ்வகர்மா, சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற, புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவைக் காண, ஏராளமான பக்தர்கள், ஆலயத்துக்கு வந்து, தரிசனம் செய்து, விநாயகப் பெருமான் அருள் பெற்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.