spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்‘திராவிட புரோஹிதர்’ ஸ்டாலினுக்கு சுடச்சுட சாட்டையடி கொடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

‘திராவிட புரோஹிதர்’ ஸ்டாலினுக்கு சுடச்சுட சாட்டையடி கொடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

- Advertisement -

இந்துக்களின் திருமணச் சடங்கு குறித்து விமர்சனமும் கிண்டலும் செய்து பேசிய தி.மு.க.ஸ்டாலினுக்கு டிவிட்டர் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள்.

இவற்றில், டிவிட்டர் பதிவில் கணேஷ் என்பவரின் கருத்துப் பதிவுகள்… இவை. இவர் எல்லா சாதித் திருமணங்களும் புரோஹிதர், ஐயர்களை வைத்து நடத்துவதில்லை என்று குறிப்பிட்டு சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்… அவை:

பொதுவாக தமிழகத்தில் திருமணமுறைகள் பல உள்ளன.ஒவ்வொரு மரபுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி சம்பிரதாய முறைகள், மந்திரங்கள் உள்ளன.பல முறைகள் இருந்தாலும் இந்த திருமணங்கள் அனைத்தும் வைதீகதிருமணம் என்றே அழைக்கப்படும்.

வைதீக திருமணம் என்பதால் எல்லாமே பிராமணர்கள் செய்துவைக்கும் திருமணம் என்று நினைக்கக்கூடாது.ஈரோடு ராமசாமி காலத்திற்க்கு முன்பிருந்தே, தங்கள் மரபு பெரியவர்களை வைத்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையினர் பலர் உள்ளனர்.

கொங்கு கவுண்டர்கள் தங்கள் குலகுரு சிவாச்சாரியார்கள் ஆசியோடு, அருமைக்காரர் என்பவரை வைத்து திருமணம் செய்துகொள்வார்கள்.ஆசாரிகள் தங்களுக்கென்று உள்ள விஸ்வகர்மா குருவை வைத்து திருமணம் செய்துக்கொள்வார்கள்.

பொதுவாக தமிழக ஆரியவைசிய செட்டியார்கள் பஞ்சாங்க பிராமணர் என்ற தெலுங்கு பிராமணர்களையே வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் பிராமணர்களை, சிவாச்சாரியார்களை முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார்கள்.

சைவப்பிள்ளை, சைவமுதலியார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், சைவ வேளாளர்கள் போன்றவர்கள் தங்கள் குலகுரு மரபாகிய சிவாச்சாரியார்களை கொண்டு அகோர சிவாச்சாரியார் பததிப்படி ஆகம மந்திர திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வைணவ சம்பிரதாய முறை திருமணம் உள்ளது .இதன் மந்திரம் வேறு. இதுவன்றி வள்ளுவ பண்டாரம் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் உண்டு.

இவ்வாறு பல வகை திருமணங்களும், அதற்க்கான சாஸ்திர மரபுகளும் உள்ளபொழுது ,இந்த திராவிட, நாத்திக வாதிகள் வேதங்களையும், பிராமணர்களையும் இகழ்வதற்காக வேத நூலில் உள்ள ஒரு திருமண மந்திரத்திற்க்கு தவறான பொருள் கூறி துவேஷத்தை வளர்ப்பது கண்டிக்கத்தக்கது.

முதலில், 1) இம்மந்திரத்தின் உண்மையான உன்னதமான பொருள் வேறு. 2)இம்மந்திரத்தை பிராமணர்களே தங்கள் திருமணத்தில் பயன்படுத்திவருகிறார்கள். மற்ற மக்கள் திருமணத்தில் இது பயன்படுத்துவதில்லை.சிவாச்சாரியார்கள் செய்துவைக்கும் சைவாகம திருமணங்களில் இம்மந்திரம் வருவதில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, பிராமண துவேஷத்தை, வெறுப்பை வளர்த்து அரசியல் செய்ய இந்த நாத்தீகவாதிகள் முற்படுவது அபத்தமான செயல். வேததிருமணமந்திரத்தின் உண்மையான அர்த்தம் இதோ. ”சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ””

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.இதற்க்கு திராவிடபோலிகள் கூறும் பொய்விளக்கம் . நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)

Somah prathamo vivide Gandharvo vivida uttarah Trtiyo Agnistepatih Turiyastemanusyajah. Somo dadad gandharvaya Gandharvo dadadagna; ye Rayincapputramscadad Agnirmahyamatho imam – Rigveda, 10. 85, 40. 41.

ஆனால் இதன் உண்மைப் பொருள்: “முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான் பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான் மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான் நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்”

இதன் உட்பொருள்:

  1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 – 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது
  2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.
    பெண் இன் 5 – 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது
  3. அதன் பின் 11 – 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது). பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விஷயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன

இந்த மந்திரத்தில் அக்கினி பதி என்று சொல்லப்படுவதால் சமஸ்க்ருதம் ஒழுங்காகத் தெரியாத மூடர்கள் அக்கினி பெண்ணின் கணவன் என்று மொழிபெயர்க்கிறார்கள். பதி என்பதற்கு அரசன், ஆட்சியாளர், காப்பாளர், தலைவர், கணவர் என்று ஐந்து பொருட்களுண்டு. இடத்துக்குத் தகுந்தவாறு பொருள் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe