அதிமுக., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கை… பட்ஜெட்டில் நிறைவேற்றிய மோடி!

Published:

admk election maniesto - 2026

அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை-2014 பக்கம் 31. பத்தி 14 இப்படி உள்ளது.
தலைப்பு: தனிநபர் வருமான வரி
தேர்தல் வாக்குறுதி:

தற்போதுள்ள தனிநபர் வருமான வரி விகிதத்தின் படி இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும்..

இதன் காரணமாக சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 5 லட்ச ரூபாய் வருமானம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கும்

இப்படி, 2014 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்து இருந்தார் ஜெயலலிதா. இப்போது மத்திய பாரதிய ஜனதா அரசு அதை நிறைவேற்ற முனைந்திருக்கிறது.

பா.ஜ. பட்ஜெட்டைப் பாராட்டும் முதல்வர் எடப்பாடி “ஜெயலலிதா முன்பே கூறியது தான் இது!” என்பதையும் சேர்த்துச் சொல்லி இருக்கலாம் என்று அங்கலாய்க்கின்றனர் அதிமுக.,வினர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img