நாட்டுக்கும் ராணுவத்துக்கும் எதிரா கருத்து பதிவிட்டீங்க… இதான் நடக்கும்! இந்த 5 பேரும் என்ன செஞ்சாங்க தெரியுமா?

நாட்டுக்கும் ராணுவத்துக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் அவர்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து புகார் செய்வது என்று முடிவு செய்து ஒரு குழு செயல்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

அதில்,  தமிழகத்தை சேர்ந்த “ARMY FRIENDS TAMILNADU” என்ற அமைப்பு செய்த காரியம் இந்தியா முழுவதும் பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் படுகொலையை கண்டித்து நாடே கொந்தளித்துள்ள நிலையில் சிலர் பாகிஸ்தானை ஆதரித்தும் இந்தியாவை சிறுமை படுத்தியும் கருத்துக்களை சமூக வலைத்தளமான முகநூல் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க எண்ணிய 5 இளைஞர்கள் செய்த காரியம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது.

அதாவது நேற்று யாரெல்லாம் ராணுவத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுருந்தார்களோ அவர்களின் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவர்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய குறிப்பு மற்றும் அவர்கள் பதிந்த தகவல்களின் screen shot ஆகியவற்றை கொண்டு

“அவர்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் காவல்துறையில் ஆன்லைன் புகார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கும் புகாராக பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

நேற்று மட்டும் 180 புகார்களை இந்த குழுவினர் சேகரித்து அனுப்பியதில் சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் அங்கு பணிபுரியும் 6 நபர்களை வேலையில் இருந்து நீக்கி உடனடியாக உத்தரவிட்டுள்ளது மேலும் நாட்டிற்கு எதிராக தங்கள் நிறுவனத்தில் கருத்து பதிவிடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுபோன்ற தகவல்கள் தங்களுக்கு கிடைத்தால் உடனடியாக [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு தகவல் மற்றும் அதற்கான லிங்க் அளித்தால் தாங்கள் முறைப்படி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்காக நேரத்தை கழிக்கும் பலருக்கு மத்தியில் இந்த இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தத் தகவல் குறித்து உறுதிப் படுத்துவதற்காக நாம் மேற்கண்ட இமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து, தகவல் கேட்டோம் இதுவரை பதில் இல்லை! அதே நேரம் இன்னொரு தகவலும் வைரலாகி வருகிறது. அதில், இந்திய ராணுவத்தையும் இந்தியவையும் தவறாக பேசினால் அல்லது பதிவுகள் மேற்கொண்டால் IPC Sec153A (promoting enmity) அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தரலாம்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...