16/10/2019 8:25 PM
சற்றுமுன் ஜூன் 17: இன்று வாஞ்சிநாதன் நினைவு நாள்!

ஜூன் 17: இன்று வாஞ்சிநாதன் நினைவு நாள்!

-

- Advertisment -
- Advertisement -

வீர வாஞ்சிநாதனின் நினைவு நாள் ஜூன் 17. நம் சமூகத்தினர் ஒவ்வொருவரும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாள். வீர வாஞ்சியின் கதையை அவருடைய வீரத்தை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

வாழ்க்கைச் சுருக்கம்:

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு:

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு.எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.

நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி’எஸ்கோர் ஆஷ். ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்

ஆஷ் துரை கொலை:

1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.

*வீர வாஞ்சிநாதன் நினைவு நாள்…

நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்சை மணியாச்சியில் சுட்டுக்கொன்று தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாவீரன் வாஞ்சிநாதனின் 108வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் பிறந்த ஊரான செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள நினைவு மணி மண்டபத்தில் உள்ள வெண்கல சிலைக்கு அரசு சார்பில் இன்று காலை 9.30 மணிக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இதே போல் பேரூந்து நிலையம் அருகில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: