வட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்!

Published:

heat waves in train - 2026
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பரவலாக மழை பெய்தால் தான், வெப்பம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், இல்லையேல், வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதது

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img