சென்னை. சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தெரிவித்தது…. அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்திற்கு நேற்று (26,03,2015) இரவு சுமார் 1,015 மணியளவில் வந்த இரண்டு நபர்கள் டிபன் வா’;கி விட்டு ஆயிரம் ரு்பாய் நோட்டை கொடுத்து மாற்ற முயன்றனர், நோட்டை பரிசோதனை செய்த ஊழியர்கள் அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மேற்படி தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியான கைலாசம் வ-45. என்பவரிடம் தெரிவித்தனர். உடனே அவர் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர், விசாரணையில் அவர்கள் வைத்திருந்த ரு்பாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டதன்பேரில். கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர்களான 1,அருண்குமார் (21). த-பெ,ரவி. எண்,29. இராஜம’;கலம். வில்லிவாக்கம் மற்றும் அவரது உறவினரான 2,கிnக்ஷhர் கோலி (20). த-பெ, பாலு. கள்ளி டவுண். பூனே ஆகியோர் கைது செய்யப்பட்டனர், போலீசார் மேற்படி நபர்களிடம் தீவிர விசாரணை செய்ததில். அவர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்தனுப்பிய கும்பலைச் சேர்ந்த ஸ்டேன்லிபாபு (30).வில்லிவாக்கம், தோலாராம் (28) முகப்பேர் சுரேஷ் கிஷோர் (27) இராஜஸ்தான் மாநிலம்; பாபுலால் (43). மகாவீர் கார்டன். காவாங்கரை ஆகிய 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு. அவர்களிடமிருந்து ரூ,3 லட்சத்து 11ஆயிரத்து ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது, விசாரணையில் ஸ்டான்லி பாபு என்பவர் சிந்தாமணி அருகில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருவதும். ராஜங்களத்தில் சொந்தமாக வீடு கட்டி வருவதும். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால். மேற்படி தோலாராம் என்பவரிடம் ஆவணங்களை வைத்துக் கொண்டு பணம் கேட்டதும். அதற்கு தோலாராம் தான் கொடுக்கும் கள்ள நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் கணிசமான கமிசன் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார், அதன்பேரில். தோலாராம் கொடுத்த ஒரு தொகையை மாற்றுவதற்காக ஸ்டான்லி பாபு தனக்கு தெரிந்த நபர்களான பாபுலால் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து முதலில் கொடுத்த கள்ள நோட்டுகளை மாற்றி ஒரு கணிசமான தொகையை கமிசனாகப் பெற்றுள்ளனர், பின்னர் மேலும் கள்ள நோட்டுகளை பெற்று. அதனை மாற்றுவதற்காக தனது மைத்துனரான மேற்படி அருண்குமார் மற்றும் அவரது உறவினர் கிஷோர் கோலி கள்ள நோட்டுகளை கொடுத்தனுப்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது, கைது செய்யப்பட்ட மேற்படி குற்றவாளிகள் 6 பேரும்; நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் இக்கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை முடுக்கி விடப்பட்டுள்ளது. கள்ள நோட்டுக் கும்பலை கைது செய்து. கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த அமைந்தகரை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பெரியபாண்டியன் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஜார்ஜ் பாராட்டினார்,
சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari