ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்

Published:

srirama-sita உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும் ஊர்போற்றும் மக்களின் காதலன் ! சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய    சூழ்ச்சிகள் இல்லாத சோதரன்  ! அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை அழுக்கினை நீக்குகிற புண்யவான் ! புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான்  – குகப் புதையலை நண்பனாய்க் கூட்டினான் !               (8)   தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த திதியையும் தன்னாலே வென்றவன் மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு மாதினைக் கொள்ளாத நெஞ்சினன் ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர் ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன் வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு வேடுவனின் பாடுபொரு ளானவன்   !               (16)     மானுட சாதியில் வந்தவன் – மக்கள் மண்ணிலே உற்றதுய ருற்றவன்                                      மானுடன் மாயையில் ஓடினான் – பெண் மானுடச் சாயையில் வாடினான் ! ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை ஊரிலே வெற்றியும்  கூடினான் ! வானுயர் மாருதி நட்பினான் – நம் மனதிலே ராமனாய் அப்பினான்  !               (24)             

  • கவிஞர்  மீ.விசுவநாதன்

(28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img