ஜனவரி 27முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு பெறப்படும் : பா.ம.க

Published:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் ஜனவரி 27முதல் பெறப்படும் என்று பா.ம.க அறிவித்துள்ளது
இதுகுறித்து. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27 ஆம் தேதி புதன்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.
 
மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img