
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும் சென்னை அமெட் பல்கலை வேந்தருமான டாக்டர் ஜெ. ராமச்சந்திரன் யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
யாதவர் பண்பாட்டுக் கழக தலைவர் கேப்டன் மனோகரன் தலைமை வகித்தார், பாரத முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் யு.ஆறுமுகசாமி யாதவ், சாத்தூர் எஸ். முருகேசன் யாதவ், ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டார்கள், இந்நிகழ்ச்சியை யாதவர் பண்பாட்டு கழக செயலாளர் எ.ராமசாமி யாதவ் ஏற்பாடு செய்திருந்தார் யாதவர் பண்பாட்டுக் கழக பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.