23/09/2019 12:51 PM

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58.

திமுகவில் சாதாரண உறுப்பினர் முதல் துணைப் பொதுச்செயலாளர் வரை பதவி வகித்தவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1996-2001ல் துணை சபாநாயகராக பதவி வகித்தவர் பரிதி இளம்வழுதி. 2006-2011ல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரிதி இளம்வழுதி மறைவுக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது; தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை படைத்தவர் பரிதி இளம்வழுதி- என்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.Recent Articles

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

கட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்!

இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் சுட்டுக் கொலை! தில்லியில் பயங்கரம்!

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories