07/07/2020 3:22 PM
29 C
Chennai

பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.
curralam பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பாலின் ரோஸ் ஜெமிமா (வயது47). இவர் அந்த பகுதியில் ஏழை மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி நடத்தி வருகிறார். அந்த விடுதியில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த குத்தா லிங்கம் மகள் மணிமேகலை (14), அம்பை வேலாயுதம் நகர் வில்லியம் மகள் மரிய லிவ்யா (15), கடையநல்லூரை சேர்ந்த மணி மகள் அபிநயா (16) ஆகியோரும் அங்கு தங்கியிருந்தனர். அவர்கள் 3 பேர் மற்றும் விடுதி நடத்தி வந்த கோவிந்தன் மகள் ஜெஸ்பா எஸ்தர் (12) ஆகிய 4 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

அபிநயாவும், மரிய லிவ்யாவும் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். மணி மேகலை 10-ம் வகுப்பும், ஜெஸ்பா எஸ்தர் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த 4 மாணவிகளும் நன்றாக படிக்காமல் அடிக்கடி விளையாடி வந்ததால், விடுதி கண்காணிப்பாளர் பாலின் ரோஸ் ஜெமிமா மாணவிகளை கண்டித்துள்ளார். மேலும் தனது மகள் ஜெஸ்பா எஸ்தருடன் பழக கூடாது என்றும் சத்தம் போட்டுள்ளார்.

இது தோழிகளாக பழகிய 4 மாணவிகளுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த 4 மாணவிகளும் ஒன்றாக விடுதியை விட்டு வெளியேறி மாயமானார்கள். வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.

உடனடியாக விடுதி மேற்பார்வையாளர் பாலின் ரோஸ் ஜெமிமா அந்த பகுதியில் மாணவிகளை தேடினார். மாணவிகள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் அவர்களை தேடினார்கள்.

ஆனால் எங்கும் மாணவிகளை காணவில்லை. இதுகுறித்து பாலின் ரோஸ் ஜெமிமா குற்றாலம் காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவிகளையும் தேடி வருகிறார்கள்.

4 மாணவிகள் மாயமானது குறித்து தகவலறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்றுஅங்கு தங்கியுள்ள மற்ற மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் காணாமல் போன மாணவிகள் குறித்து விசாரணை நடத்தினார்.

மாயமான 4 மாணவிகளின் புகைப்படங்களையும் தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மாயமான மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...