கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஏபிவிபி கோரிக்கை!

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

NEET

கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஏபிவிபி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூறியதாவது…

வரும் கல்வியாண்டில் +2 தேர்வில் வெற்றி பெற்று தங்களின் கடுமையான முயற்சியின் காரணமாக NEET தேர்வில் வெற்றி அடைந்துள்ளீர்கள்! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏபிவிபி.,யின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த கொள்கிறோம்.

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

எனவே தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் NEET தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கிறோம்.

தமிழக அரசுக்கு ABVP யின் வேண்டுகோள் :-

2017,2018,2019 கல்வி ஆண்டில் CBSC பாடத்திட்டத்தின் அடிப்படையில் NEET தேர்வானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு தேசிய தேர்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட NEET தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்கள் எழுதியதில் 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 48.51% தேர்ச்சி விழுக்காடு
கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 % பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது!

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் மற்ற மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விட பன்மடங்கு அதிகமாக தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக கல்லூரிக்கு 50 சீட்டுகள் விகிதம் மாநிலம் முழுவதும் சுமார் 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் ஒதுக்க மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ABVP சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!

தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு கூடுதலாக 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் ஒதுக்கினால் மாணவர்களுக்கு நல்ல ஒரு தீர்வாக அமையும் என ABVP கருதுகிறது.

மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் தந்து கூடுதலாக 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் பெற முயற்சி செய்ய வேண்டும் என ABVP வேண்டுகிறது.

தமிழகத்தில் பாகுபாடற்ற பாடத் திட்டத்தினால் மாணவர்கள் NEET தேர்வை எதிர்கொள்ளுவது மிகவும் கடினமானதாகவும் , மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு NEET பயிற்சி என்பது எட்டாக்கனியாக உள்ளது.

எனவே அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் NEET பயிற்சியை அரசே வழங்க வேண்டும் என ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்…

இவ்வாறு, ஏபிவிபி.,யின் திருநெல்வேலி மண்டலப் பொறுப்பாளர் ஆசிரியர் டி. செந்தமிழ் அரசு பெயரில் மின்னஞ்சல் மூலமாகவும் தபால் மூலமாகவும் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூறினர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.