இது வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்களின் ‘ஏஜெண்டு’த்தனம் அன்றி வேறில்லை!

Published:

notice mukkulathor - 2026

முக்குலத்தோர் புலிப்படை, முக்குலத்தோர் பாதுகாப்பு படை என்ற பெயரில் ஒளிந்து கொண்டு அரசியல் செய்யும் கிறிஸ்த்தவ அடிப்படைவாதிகள், சமணம் செழித்த தமிழ் மண்ணில் சமண ஆலயம் கட்டுவதை எதிர்க்கிறார்களாம்.

இந்த உள் நோக்கம் கொண்ட போராட்டம் மிகவும் கீழ்த்தரமானது. யாருடைய வழிபாட்டு முறையையும் தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. மதுரை அருகில் உள்ள மாங்குளத்தில் பாண்டியன் சமண ஆலயத்திற்கு நிவந்தம் வழங்கிய பழமையான கல்வெட்டு இருக்கும் இடத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான கோரிக்கை.

ஏன் இதை கண்டிக்க வேண்டும் என்றால் சகல வழிபாட்டு முறைகளையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளும் உலகின் முன்னோடி சமயமான இந்து சமயத்தின் பேரால் இப்படியான கீழ்மைகள் கண்டிக்கப்பட வேண்டும்.

அதோடு இந்த நோட்டீஸ்களின் நோக்கம் வெறும் வழிப்பறி, மிரட்டல் மூலம் பணம் பெறுவது மட்டுமல்ல. நம் தேசத்தை பற்றிய கீழ்த்தரமான மதிப்பீடுகளை விதைத்தல், இணக்கத்துடனும், ஒற்றுமையோடும், இருக்கும் இந்து, சமண மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துதல், இந்துக்களையும் சமணர்களையும் பிரிக்கும் சதி.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

மிக மிக இணக்கமான வன்முறையற்ற சமணர்களை பொறுக்கிகள் மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இந்த பொறுக்கித்தனத்தை வன்முறை சமயங்களான பாலைவன சமயங்களிடம் இவர்கள் காட்டுவதில்லை என்பதையும், வன்முறையற்ற சமணம் மாதிரியான அப்பிராணி சமயங்களிடம் ரெளடித் தனத்தில் ஈடுபடுவதையும் ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும்.

– ராஜமாணிக்கம் வீரா

Related articles

Recent articles

spot_img