லண்டனில் அமையும் உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்!

Published:

picture - 2026

நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படம்!  லண்டனில் அமைய உள்ள உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம் பற்றியது..!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற கட்டடங்களில் இன்ஃபினிட்டி கட்டடமும் ஒன்று. மொத்தம் 55 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியில் 360 டிகிரி கொண்ட உலகின் முதல் நீச்சல் குளத்தைக் கட்ட முடிவெடுத்துள்ளனர். அதை அடுத்து, அதற்கான மாதிரி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு பொறியாளர்கள்.

swimingpool - 2026இந்த மொட்டை மாடியில் அந்த நீச்சல் குளமானது, 200 மீட்டர் உயரம் வரை வெறும் கண்ணாடிகளால் சூழப் பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் 6 லட்சம் லிட்டர் அக்ரலிக் (acrylic) தண்ணீர் நிரப்பப்படுமாம்.

இதில் நீந்துபவர், தண்ணீருக்கு அடியில் இருந்து வெளியேயும், வெளியிலிருந்து தண்ணீருக்கு அடியிலும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியுமாம்.

காலை நேரங்களில் நீச்சல் குளத்தில் உள்ள நீர் மிகத் தெளிவாகவும் இரவு நேரங்களில் அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு ஒளியில் பிரகாசமாகவும் காணப்படும் என்கிறார்கள்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

virtual swiming pool - 2026இந்த நீச்சல் குளத்தின் அடிப்பகுதியும் கண்ணாடியால் வடிவமைக்கப் பட்டுள்ளது. எனவே கட்டடத்துக்குள் வரும் மக்கள், மேலே நீச்சல் குளத்தில் உள்ளவர்களைப் பார்க்க முடியும்.

இந்த நீச்சல் குளம் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள்!

Related articles

Recent articles

spot_img