அதிர்ஷ்டம்… புரட்சி… அசத்தல்… எல்லாம் கலந்த ஜெகனின் அமைச்சரவை!

ap ministry - 2026

எதிர்பாராமல் அடித்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்! ஜெகன் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளைப் பார்க்கும் போது!

ஜெகன் அமைச்சரவையில் பழைய தலைவர்களும் புதிய தலைவர்களும் சேர்ந்து கலந்த அமைச்சரவையாக உள்ளதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம்.

மாவட்டங்களையும் சமூக வர்க்கத்தினரையும் கணக்கில் கொண்டு தராசில் வைத்து நிறுத்தது போன்று அமைச்சர் பதவிகளை வழங்கியிருக்கிறார் ஜெகன். சீனியர்களும் இளைஞர்களும் பெண்களுமாக கலகல என கலந்த அமைச்சரவை.

இதில் ஏழு பேருக்கு முற்றிலும் எதிர்பார்க்காத, யூகிக்க இயலாத அமைச்சர் பதவிகள்..! 25 அமைச்சர்களில் பிஹெச்டி முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் உள்ளார்கள். ஆந்திர பிரதேச அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது.

25 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். சனிக்கிழமை இன்று ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் என்று அமைச்சர்ளை சமமாக தேர்ந்தெடுத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. முக்கியமாக கேபினட்டில் சீனியர்களுக்கு பெரிய பதவிகளை அளித்துள்ளார்! அதேபோல யாராலும் கணிக்க இயலாதபடி சிலருக்கு அமைச்சர் பதவி யோகம் அடித்துள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ap ministry2 - 2026மாவட்டங்கள், சமூகப் பிரிவுகள்  என்ற அடிப்படையில் எதிர்பாராத பதவிகளை பெற்று உள்ளார்கள் சில தலைவர்கள். அதிர்ஷ்டம் அடித்தது போல் ஏழு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. யாரும் எதிர்பாராத விதத்தில் இவர்கள் அமைச்சர் குழுவில் பிடித்து விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

கேபினட்டில் இடம் பிடித்தவர்கள் தானேடி வனிதா, செருகுவாட ரங்கநாத ராஜு, வெல்லம்பல்லி ஸ்ரீனிவாஸ், அனில் குமார் யாதவ், நாராயணசுவாமி, சங்கரநாராயணா, கும்மனூரு ஜெயராம் இவர்கள் அந்த ஏழு பேர்.

இவர்களுள் சங்கரநாராயணன் முதல் முறை எம்எல்ஏவாக வென்றுள்ளார். மற்றவர்கள் இரண்டாவது முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று பதவியை பிடித்துள்ளார்கள். இவர்கள் பெரும்பாலோருக்கு சமூகப் பிரிவு அடிப்படையில் பதவி கிடைத்துள்ளது.

பெண் எம்எல்ஏவுக்கு உள்துறை அமைச்சர் பதவி. ஆந்திராவில் தன் மந்திரிகளைத் தேர்ந்தெடுத்த விதத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி .

குண்டூர் மாவட்டம் “பத்திபாடு” எம்எல்ஏ சரிதாவுக்கு தங்கமான வாய்ப்பு கிட்டியுள்ளது. அன்றைய முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி “சேவேள்ள” எம்எல்ஏ சபீதா இந்திரா ரெட்டிக்கு ஹோம் மினிஸ்டர் பொறுப்பை ஒப்படைத்து ஆந்திரப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தினார். அதுபோல் பெண்ணுக்கு ஹோம் மினிஸ்ட்ரியைக் கொடுத்துள்ளார் ஜெகன்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

சீனியர் தலைவர் “புக்கன ராஜேந்திர நாத் ரெட்டிக்கு ஜெகன் முக்கியமான நிதித் துறையை  ஒதுக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக ஐந்து துணை முதல்வர்களை அமர்த்தியபோது கூட சமூகப் பிரிவுகளின் சரிவிகித அடிப்படைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

பாமுல புஷ்பா ஸ்ரீவாணி, பில்லி சுபாஷ் சந்திரபோஸ், ஆள்ள நானி, அம்ஜாத் பாஷா, நாராயணசுவாமி இவர்களே அந்த ஐந்து துணை முதல்வர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories