ட்விட்டரில் பதிலளிக்கிறார் ஜேட்லி

முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி:
பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “மக்களவையில் புதன்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து அவரது டிவிட்டர் பக்கத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மக்களவையில் 2017-2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11.08 மணிக்கு தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லியின் டிவிட்டர் பக்கம்: