வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5% ஆகக் குறைப்பு

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உதவும் வகையில், ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

புதுதில்லி :
நாடாளுமன்றத்தில், மத்திய நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் மற்றும் வரி சலுகைகள் ஏதும் இடம்பெறவில்லை.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 % மட்டும் வருமான வரி விதிக்கப்படும் என்றும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும் என்றும் அறிவித்தார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உதவும் வகையில், ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.