ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் கூறியதன் பேரிலேயே கார்த்தியை சந்தித்ததாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற உதவ கோரினோம் என்று தெரிவித்துள்ளார் இந்திராணி முகர்ஜி.

உதவி குறித்த கேள்விக்கு பதிலாக, தனது மகன் கார்த்தியின் தொழிலுக்கு உதவுமாறு தங்களிடம் ப.சிதம்பரம் கூறியதாக இந்திராணி  கூறியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கோரியுள்ளார். மேலும் தந்தையும் மகனும் இந்திராணியையும் பீட்டரையும் சந்தித்ததற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

 

இதனிடையே, சிதம்பரம் பதவியில் இருந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், சிபிஐ., அமலாக்கத்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஊழல்கள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டார் என்றும் பரவலாக குற்றம் சாட்டப் படுகிறது. 2ஜி ஊழல் தீர்ப்பு விவகாரத்தில், ஓபி.ஷைனி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறிய, “ஆதாரங்களுக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன்” என்ற வார்த்தைக்கு பக்கபலமாக இருந்தவர் ப.சிதம்பரம் என்று குற்றம் சாட்டும் பா.ஜ.க.வினர், 2ஜி விவகாரத்தில் நடைபெற்ற மெத்தனப் போக்கு இனி இருக்கக் கூடாது என்று டிவிட்டர் பக்கங்களில் பதில் அளித்து வருகின்றனர்.

பல ஆயிரம் கோடிகளை அடித்தவர் சிக்குவது வெறும் 5 கோடி ரூபாய் லஞ்சத்தில் என்று குறிப்பிடும் சிலர், அதற்கான காரணத்தையும் விவரிக்கின்றனர்.

தன் மகளை கொன்ற விவகாரத்தில் தற்போது சிறையில் இருக்கும் விசாரணை கைதி ஐ.என்.எக்ஸ் மீடியாவை சேர்ந்த இந்திராணி. இந்த ஐ.என்.எக்ஸ், ஒரு காலத்தில் இந்திய ஊடகங்களில் கோலோச்சிய ஒன்று.

இவரை விசாரிக்க அமலாக்க பிரிவு 2017 ஆகஸ்ட்டில் சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க, விசாரணை பிப் 2018இல் நடந்தது. தங்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ 5 கோடி முதலீடு வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதாக கூறி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய (foreign investment promotion board – FIPB) அனுமதி வாங்கி, ரூ 5 கோடிக்கு பதில் ரூ 305 கோடி கொண்டு வந்தது ஐ.என்.எக்ஸ்.

ப.சிதம்பரத்தின் ஆசியுடன் நடைபெறும் இந்த விதி மீறலைக் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்க கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் மூலம் ரூ 5 கோடி லஞ்சம் செலுத்தியதாக ஐ.என்.எக்ஸ் மீடியா – இந்திராணி முகர்ஜி அமலாக்கப் பிரிவு விசாரணையில் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னரே சில தினங்களுக்கு முன் கார்த்தியின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டு திஹாரில் அடைக்கப்பட்டார்.

இப்போது கார்த்தி கைது செய்யப் பட்டுள்ளார். அவருக்கு இன்று ஒருநாள் நீதிமன்றக் காவல் அளிக்கப் பட்டது. அடுத்து இன்றும் அவர் ஆஜர்படுத்தப் பட்டு, காவலை நீட்டிக்க அனுமதி கோரப் படும் என்று கூறப்படுகிறது.

2015ல் கார்த்தி சிதம்பரம் அலுவலகங்களில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, இது தொடர்பான காசோலைகள் சிக்கின என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆக, பல ஆயிரம் கோடிகளை அடித்தவர் சிக்குவது வெறும் 5 கோடி ரூபாய் லஞ்சத்தில்…!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...