வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது?
அடிப்படை காரணம் வயிற்றுப்புண். அல்சர் இருந்தால் இந்த பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இன்னொன்னு அஜீரன கோளாறு. நாம் எந்த உணவை சாப்பிட்டாலும் அடுத்த நான்கு மணிநேரத்தில் செரிமானம் ஆயிடனும். அப்படி இல்லாமல் செரிமான கோளாறுகள் இருந்தால், உணவு மண்டலத்தில் சாப்பிட்ட உணவு தங்கி, அதை சுற்றி கெமிக்கல்கள் உற்பத்தியாகி, அது வாயிக்கும் வயிற்றுக்கும் வந்து போகும். சில சமயம் புளிச்ச ஏப்பமா. பல் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், உணவுக்குழல், இரைப்பையில் பிரச்சனை இருந்தால், சாப்பிட்டு விட்டு வாய் கொப்பளிக்காமல் மேல் வாயை துடைத்துக் கொண்டு போனால், பல் துலக்காமல் இருந்தால், என பல காரணங்கள் இருக்கிறது. கடும் நாற்றத்தை தருவது வயிற்றுப்புண். இதற்கு அடுத்து பல் ஈறுகளில் வீக்கம், புண் அல்லது ரத்தஒழுக்கு சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் அம்சங்கள். இன்னொன்று கல்லீரல் பாதிப்பு இருந்தாலும் வாடை பிரச்சனை பிரச்சனை வரலாம் என்கிறது மருத்துவ உலகம்.
வாய் துர்நாற்றம் விலக
Popular Categories



