இவாலட் பயன் படுத்த அடையாளச் சான்று அவசியம்! இருக்கும் பணம் என்ன ஆகும்?

சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்

E-Walletகளை பயன்படுத்த அடையாளச் சான்று கட்டாயமாகிறது. ஆன்லைன் வாலட்டுகளை பயன்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால், அமேசான் நிறுவனத்தின் இ வாலட் பயனாளர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு சரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவுத்தலின் பேரில் ஆன்லைன் வாலட்டுகளை பயன்படுத்த பயனாளர்கள் தங்களின் அடையாளச் சான்றை பதிவு செய்வது அவசியமாகிறது. புதன் கிழமை நள்ளிரவுடன் இதற்கான அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் இ-வாலட்டுடன் அடையாளச்சான்றை இணைக்க ஆர்வம் காட்டவில்லை.

மொபைல் ரீச்சார்ஜ் போன்ற சிறிய தேவைகளுக்கே இ – வாலட்டுகளில் உள்ள பணத்தை பயன்படுத்துவதால் இதனை அவசியமற்றதாக கருதுகின்றனர்.   இதனிடையே இ வாலட்டில் ஏற்கெனவே பணம் வைத்திருப்பவர்கள் அடையாளச் சான்று விவரங்களை வழங்காவிட்டாலும் பணத்தை இழக்க தேவையில்லை.

அவர்கள், இவாலட்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். வேறு ஒருவருக்கு பணம் அனுப்பவோ அல்லது கட்டணம் செலுத்தவோ அடையாளச்சான்றுகளை இணைப்பது கட்டாயமாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.