பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தர்ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரசேகர ராவ் மட்டுமல்ல, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு என்று மட்டுமல்ல, மோடியுடனும் பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதற்கு பதிலளித்துள்ள திமுக., தலைவர் ஸ்டாலின்,  நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தது திமுக.,தான்! பச்சைப்பொய் நிறைந்த பேட்டியை அளித்த தமிழிசை சவுந்தரரானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! தோல்வியின் விளிம்புக்குச் சென்றுள்ள பாஜக.,வுக்கு இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவது கைதேர்ந்த கலை!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்ற திருமதி தமிழிசையின் “பச்சைப் பொய்”க்கு என் பதில் இதோ!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக் காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அ.தி.மு.க அரசைத் தூக்கியெறிவோம்! பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் பொய் பேட்டி அளித்திருப்பதற்காக வருத்தப்படுகிறேன் என்று அறிக்கையில் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இதனை திமுக., பாஜக.,வுக்கு இடையேயான அரசியல் என்று விட்டுவிடாமல், திமுக., தங்கள் கூட்டணியை விட்டுப் போய் விடுமோ என்ற கவலையில் உடனடியாக பதில் அளித்துள்ளனர் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தமிழிசை சொல்வது வடிகட்டிய பொய் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வடிகட்டிய பொய் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தொடர்ந்து, குமரி ஆனந்தன் மகளே பொய் சொல்லக்கூடாது பாப்பா..! தமிழிசைக்கு முத்தரசன் கடும் கண்டனம்!

ஸ்டாலின் கேபினட் அமைச்சர் தொடர்பாக பாஜகவுடன் பேசி வருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய்கள் பாஜகவின் மூலதனமாகிவிட்டது. பிரதமர் மோடி பொய்களை கூறியே அரசியல் நடத்தி வருகிறார். தங்கள் தலைவர் மோடியை போலவே தமிழிசையும் பொய் பேசி வருகிறார். தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார். தமிழிசை உண்மையை பேச வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...