
விருதுநகரில் 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தாத்தா முறை உறவினா் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து்ள் தர்மம் கிராமத்தை 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு தாய், தந்தை இல்லாததால் தனது அத்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் அதே ஊரைச்சோ்ந்த தாத்தா உறவான கருப்பையா(வயது 70) என்ற முதியவா் வீட்டில் டிவி பார்ப்பதற்காக செல்வது வழக்கம் இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடற்சோர்வு, வாந்தி, மயக்கம், வயிற்றுவலியால் துடித்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியின் அத்தை சோதித்து பார்க்கையில் சிறுமியின் வயிறு பெரிதாகி இருப்பதை சந்தேகமடைந்துள்ளார்
இது குறித்து பதறி போன அத்தை சிறுமியிடம் விசாரித்தபோது. தான் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க போகும் போது கருப்பையா தாத்தா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து விளக்கமாக கூறி உள்ளார்.
மேலம் 5 மாத காலமாக சிறுமியிடம் கருப்பையா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவரவே கட்டனுார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கட்டனுார் காவல்துறையினா் முதியவா் கருப்பையாவை கைது செய்தனா். பின்னர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது..
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற மகளிர் போலீசார், அவர் 5 மாத கர்ப்பிணி என்பதை உறுதி செய்தனர். சிறுமிடம் வாக்குமூலம் வாங்கியதை தொடா்ந்து முதியவா் கருப்பையாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



