
போரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்கிடடு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சோ்ந்த பிரவீன்குமார்–இளந்தென்றல் தம்பதியினா். இளந்தென்றல் தற்போது எட்டு மாத கா்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை இதனைதொடா்ந்து சந்தேகம் அடைந்த மாமனார் ரவி கதவை பலமாக பலமுறை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை
இதனையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் உதவியுடன் இளந்தென்றல் சென்றுள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது. கர்ப்பிணிப் பெண்ணான இளந்தென்றல் துாக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனா்.
இதனையடுத்து அவரது உடலை கீழே இறக்கி 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவா்கள் உடலை பரிசோதனை செய்ததில் இளந்தென்றல் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
பின்னர் இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து போன இளந்தென்றல் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னா் இது குறித்த விரிவான விசாரணையில் இளந்தென்றல்–பிரவீனும் ஒருவரை ஒருவா் காதலித்து வந்துள்ளனா். பின்னர் இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.
இந்நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் இளந்தென்றல் கணவர் பிரவீன் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வந்த இளந்தென்றல் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தள்ளது.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



