கிராம தன்னார்வலர் உத்தியோகத்திற்கு போட்டிபோடும் முதுகலை பட்டதாரிகள் …..!

ஊகிக்க இயலாத அளவிற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்….!

ஒய் எஸ் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆந்திரா அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர் பணிகளுக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பு கிடைத்துள்ளது.

முதுகலை பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளார்கள்.

விண்ணப்பங்கள்  இப்போது ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டன.

இதில் இரண்டு லட்சத்திற்கு மேல் பெண்கள்.

ஒய்எஸ் ஜகன் அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர் உத்தியோகங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியின் புகழ்பெற்ற நவரத்தின திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படுவது கிராம தன்னார்வலர் உத்தியோகங்கள்.

இதற்காக விண்ணப்பங்கள் எதிர்பாராத அளவிற்கு மிக அதிக அளவில் வந்து குவிகின்றன.

அறிவித்து வெறும் எட்டு நாட்களுக்குள் ஆன்லைன் அப்ளிகேஷன்கள் 5 லட்சத்தை தாண்டி விட்டன.

செவ்வாய்க்கிழமை ஜூலை 2 மாலை வரை 5 லட்சத்து 48 ஆயிரத்து இருபத்தொன்பது விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளதாக ரியல் டைம் கவர்னர்ஸ் சொசைட்டி ஆர்டிஜிஎஸ் தெரிவித்துள்ளது.

விண்ணப்பக் கெடு ஜூலை 5ஆம் தேதி இரவு 12 மணியோடு முடிவடைகிறது.

அதற்குள் மிகப் பெருமளவில் விண்ணப்பங்கள் வந்து சேரும் வாய்ப்பு காணப்படுகிறது.

தினமும் சராசரியாக 60 ஆயிரம் பேருக்கு மேல் விண்ணப்பங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராம தன்னார்வ பணிகளுக்கு இன்டர், டிகிரி படித்தவர்களோடு பெரிய படிப்பு படித்தவர்களும் மிக அதிக அளவில் போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.

இந்த உத்தியோகங்களுக்காக இதுவரை கிராமப்புறங்களிலிருந்து 10589 பேரும், கிரிஜனங்களிடமிருந்து 194 பேரும், நகரங்களில் இருந்து 4 ஆயிரத்து 347 பேரும் முதுகலை  பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

விண்ணப்பித்தவர்ளுகள் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது விசேஷம். இன்று வரை 2.3 லட்சம் பேருக்கு மேல் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரைகுறையாக விவரங்களை பூர்த்தி செய்தல் போன்ற தவறுகளால் சில விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன .இதுவரை இவ்வாறு 28 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாகின.

முதல்வர் ஜெகன் மிக முக்கியமானதாக நினைக்கும் கிராம தன்னார்வ வேலைக்காக ஆர்டிஜிஎஸ் பிரத்தியேக போர்டலை தயாரித்துள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைனில் எளிதாக அப்ளை செய்து கொள்ளும் விதமாக வசதி செய்துள்ளது . இந்த வெப்சைட்டிற்கு நெட்டிசன்களி டமிருந்து கூட எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 16 லட்சம் பேருக்கு மேல் இந்த வெப்சைட்டை திறந்து பார்த்து உள்ளார்கள்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...