ராகுல் ராஜினாமா நாடகம்! தான் தற்போது தலைவர் இல்லை என்கிறார்..! ஆனால்..

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன்

rahul tweet - 2026

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று, தாம் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, அதே போன்று தமது கட்சியின் மற்ற 17 மாநிலத் தலைவர்களும்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதால் இனி நான் தலைவராக நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தகவல் வெளியிட்டுள்ளார்! இனியும் தாமதிக்காமல் காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 17 மாநிலங்களில் கட்சித் தலைவர்கள் பதவி விலகாத நிலையில் ராகுல் காந்தி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்!

மாநிலங்களில் கட்சியை சீரமைக்கும் வேலை இருப்பதாகவும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்!

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி. அப்போது அவர், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஏற்கெனவே நான் கடிதம் அளித்து விட்டேன். எனவே தற்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் இல்லை! புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு உடனடியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ராகுல் என்னதான் தாம் தலைவர் இல்லை தலைவர் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும், ராஜினாமா கடிதம் கொடுத்ததாக சொன்ன உடனேயே, தனது டிவிட்டர் அக்கவுண்ட் ப்ரொஃபைல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் தாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் என்று போட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

ஆனால் அவ்வாறு செய்யாமல், வெறுமனே பேச்சுக்கு மற்றவர்களைத் தூண்டி விடுவதற்காகவும் விளம்பரத்துக்காகவும், மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே தாம் தலைவர் இல்லை தாம் தலைவர் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.