
தூத்துக்குடியில் குறிப்பிட்ட ஒரு கிராம மீனவர்கள் ஊர் திரும்பி விட்டனர் எனக் குறிப்பிட்டு, அதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதும் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை வந்து சேராத சூழலில் இப்படி நன்றி பாராட்டுவது தேவையா என்று தி.மு.க மேல்மட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாடு, கேரளா பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பில் ஈட்டுப்பட்டிருந்தனர்.
அப்போது, அரபிக் கடலில் கியார் புயல் உருவான காரணத்தினால், பலத்த சூரைக் காற்று வீசியுள்ளது.
சூரைக்காற்றிலிருந்து சிக்காமல் தப்பிக்க, வெவ்வேறு இடங்களை நோக்கி மீனவர்கள் தங்களது படகைச் செலுத்தியுள்ளனர்.

கேரளா, மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மீனவர்கள் கோவா, கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் கரை ஒதுங்கினர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்ற செய்தியே அப்போது வெளியாகியது.
இந்நிலையில், 3 படகுகளில் 30 மீனவர்கள் கரை ஒதுங்கியதாக நேற்று தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், 60 மீனவர்கள் மட்டுமே காணவில்லை எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சுமார் 200 மீனவர்களை இப்போதும் காணவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டர் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘தூத்துக்குடி மாவட்டம் தருவாய்குளத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர்.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட கடற்படை, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் மத்தியில் காரசார விவாதம் எழுந்துள்ளது.
சமீப காலமாக திமுக மேலிட நடவடிக்கைகள் உதயநிதியை உயர்த்துவதற்காக, கனிமொழி திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பிவருகின்றனா்.
இந்நிலையில் திமுகவின் அரசியலில் பரம எதிரியான பா.ஜ.க வின் தேசிய தலைவர்அமித்ஷாவுக்கு நன்றி பாராட்டி கனிமொழி பதிவிட்டிருப்பது, அக்கட்சிக்குள் கடும் புகைச்சலை உருவாக்கியுள்ளது.
அக்கட்சியின் கனிமொழி ஆதரவான நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனா்.