
சமூக வலைத்தளமான டிவிட்டர், அரசியல் ரீதியான விளம்பரங்களுக்கும் அரசியல் கருத்துகளுக்கும் இடம் தரப் போவதில்லை என்று முடிவு எடுத்தாலும், அது தமிழகத்தின் திமுக., இந்தியாவின் காங்கிரஸ் கம்யூனிஸ சார்பில் இல்லாமல் இயங்கப் போவதில்லை என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது.
அரசியல் கருத்து என்றில்லாமல், மத ரீதியான, சித்தாந்த ரீதியான கருத்துகளும் மோதல்களை உண்டாக்கி சமூகத்தைப் பிளவுபடுத்தும் விதத்தில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் கொடிகட்டிப் பறக்கின்றன. குறிப்பாக, இந்துமத விரோதக் கருத்துகளும், இந்திய தேசிய விரோதக் கருத்துகளும் எந்த வித தடையும் இன்றி, மோசமான சொல்லாடல்களுடன் இந்தசமூகத் தளங்களில் வலம் வருகின்றன.
ஆனால், பதிலுக்கு இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ மதம் அல்லது அமைப்புகள் ரீதியாக விமர்சித்தோ, கேள்வி எழுப்பியோ கருத்துகள் வந்தால், அவற்றைத் தடை செய்வதுடன், அவை குறித்து கேள்வி எழுப்பியவர் சமூகத் தளக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையிலும் டிவிட்டரும், பேஸ்புக்கும் தீவிரமாக இயங்கி வருகின்றன,.
எனவேதான், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளின் கைப்பாவையாகவே இந்தத் தளங்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாகவே உள்ளது.
இருப்பினும், டிவிட்டர் பக்கங்களில் மத, சமய, நாத்திக, கொள்கை வேறுபாட்டுக் கருத்து யுத்தம் அவ்வப்போது தலைதூக்கி பரபரப்பை ஏற்படுத்தித்தான் வருகிறது.
இதில் இன்றைய பரபரப்பாக டிவிட்டர் யுத்தத்தில் பங்கெடுத்திருப்பது, திருவள்ளுவர் குறித்த கருத்து.
திருக்குறள் குறித்தும், தாய் லாந்து மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியீடு குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டதை அடுத்து, பாஜக., திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து தொடங்கி வைத்த கருத்து, இன்று ஒரு விவாதப் பொருள் ஆகியுள்ளது.
திருவள்ளுவர் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். பழந்தமிழர் வாழ்வியலில், ஐவகை நிலம் இருந்தது. ஐவகை கடவுளர், அவற்றுக்கான சூழல் என தமிழர் வாழ்வியலை உற்று நோக்கினால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவற்றில் குறிஞ்சிக்கு சேயோனாகிய குமரக் கடவுளும், முல்லைக்கு மாயோனாகிய மாலவனும் தெய்வங்களாய் அமைந்தனர்.
திருக்குறள் எழுதப் பட்ட காலத்தில், பழந்தமிழர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் நன்னெறி புகட்டும் கருத்துகளை எழுதியதால், அவர் இந்தக் கடவுளரின் உருவங்களையும், இயல்புகளையும் தம் குறள் பாக்களில் புகுத்திப் பாடியிருக்கிறார்.
சைவம், வைணவம் என்ற சமய நெறிக் கோட்பாடாக இல்லாமல், தெய்வங்களின் இயல்பைச் சொல்லி, அவர்களின் தோற்றப் பெயர், குணப் பெயர்களைக் காட்டி, தெய்வங்களை வெளிப்படுத்தினார்.

எனவே, செந்தாமரைக் கண்ணான், அறவாழி அந்தணன் என்றெல்லாம் தெய்வங்களைக் குறித்தார் திருவள்ளுவர். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் சிறப்புகளை புதைகுழியில் தள்ளிவிட்டு, ஆங்கிலேயரின் கிறிஸ்துவ மயமாக்கலை தமிழகத்தில் பரவச் செய்ய அடியாட்களாய் வேலை பார்த்து வரும் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பெயரில் வந்த திராவிட இயக்கங்கள், திருவள்ளுவரையும் தங்கள் அர்சியல் கருத்துக்களுக்கு இயைந்தவராக இழுத்துக் கொள்ள வேலையைச் செய்துவருகின்றன.

அவற்றில் முக்கியமானது, திருவள்ளுவரை அவரது மத அடையாளத்தில் இருந்து வெளியேற்றி, தங்கள் நாத்திகக் கருத்தோட்டத்துக்கு இயைந்தவராக மடைமாற்றும் வேலை! அதனால் திருவள்ளுவரின் நெற்றித் திலகத்தை எடுத்துவிட்டு, அவரது ஆன்மிக அடையாளத்தை சிதைத்து, பாழும் நெற்றியுடன்,
இந்நிலையில், இன்று திருவள்ளுவர் குறித்த படம் ஒன்று வெளியிடப் பட்டு, திருவள்ளுவரின் தெய்வீகத் தமிழை வெளிப்படுத்தும் வண்ணம், அதுகுறித்த பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்! #Thirukkural #thiruvalluvar #தெய்வப்புலவர் #திருவள்ளுவர் ஆகிய ஹேஷ்டேக்குகளில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன…
திமுக., திருவள்ளுவரை இகழ்ந்துவிட்டது என்று #DMKInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக்கில் சிலர் கருத்துப் பகிர, #BJPInsultsThiruvalluvar பாஜக., திருவள்ளுவரை இகழ்வதாக மு.க.ஸ்டாலின் கருத்துப் பகிர்ந்துள்ளார். இதனால் டிவிட்டர் சண்டை களை கட்டியுள்ளது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளதால், விவாதமும் சூடுபிடித்துள்ளது.
திருவள்ளுவரின் அன்பு மனைவி பெயர் வாசுகி
வாசுகி யார்?
பாற்கடலை கடைய மத்தாக மலையும் கயிறாக இருந்த பாம்பு வாசுகி வலியால் கக்கிய விடத்தை அமுதாக உண்டு காத்தான் சிவபெருமான்
திருமாலின் அன்பு பஞ்சணை இந்த வாசுகி
இது இந்துபுராண வரலாற்று விசயம்
திருவள்ளுவர் ஒரு முனிவர் வாசுகி ஒரு சித்தர்
மஹா விஷ்ணு (Maha Vishnu)
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (குறள்: 1103)
தாமரைக் கண்ணனுடைய (lotus-eyed Vishnu) உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?
Vamana Avatar – வாமன அவதாரம் (indirect ref)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (குறள்: 610)
அடியால் உலகத்தை அளந்த கடவுள் (Vamana) தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
Maha Lakshmi – மகா லட்சுமி
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். (குறள்: 64)
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
திருமகள் = மகா லட்சுமி (lakshmi)
Indra – இந்திரன்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள்: 25)
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய #இந்திரனே போதுமான சான்று ஆவான்.
Maha Lakshmi – மகா லட்சுமி
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்: 167)
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
திருமகள் = மகா லட்சுமி ( #Lakshmi)
திருவள்ளுவர் சைவரே எனக் கூறி, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் சேர்த்துவைத்து சென்னை மயிலாப்பூரில் ஒரு கோயில் உள்ளது. அங்கே வள்ளுவருக்கும் வாசுகிக்கும் திருவுருவங்கள் அமைக்கப் பட்டு வழிபட்டு வருகின்றனர்.
திருவள்ளுவர், திருமாலைப் பற்றிப் பாடியமையால், அவர் வைணவரே என்று சிலர் நிறுவத் தலைப்பட்டார்கள். அது குறித்த கருத்துகளும் கடந்த காலங்களில் அறிஞர் பெருமக்களால் பேசப்பட்டுள்ளது. நிறுவப் பட்டுள்ளது.
திருவள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய கருத்துகளைச் சொல்லியதால், அவர் ஜைன சமயத்தவரே என்று சிலர் கூறியதுண்டு.
அதே நேரம், புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, களவாமை, பொய்சொல்லாமை, பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வோம் எனல் தவறு என்று கூறியமை இவற்றால் இன்றைய திராவிட இயக்கங்களின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சங்கு ஊதியவர் திருவள்ளுவர் என்ற நிலையில், திருவள்ளுவர் சொன்ன எந்த ஒரு கருத்துக்கும் உட்படாத, எந்தக் கருத்தையும் ஏற்றுக் கொண்டிராத திமுக., தலைவர் தற்போது, திருவள்ளுவர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது, அடுத்த பஞ்சமி நில தீயைப் போல் சுட்டெரிக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை!