
தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாளினை அந்தந்த மாநில தினங்களாக கொண்டாடி வருகின்றனர்
தமிழ்நாட்டிலும் மொழிவாரியாக பிரிகப்பட்ட நாளினை மாநில தினமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கர்நாடகா தன் மாநிலத்திற்கென தனி கொடியை உருவாக்கிக் கொண்டதை போல் தமிழ்நாட்டிற்கும் ஒரு கொடி உருவாக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் ‘தமிழக அரசு மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போல், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விரைவாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனார் அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ம் தேதி அவருடைய நினைவு தினத்தில் அரசு வீரவணக்க நாளாக அறிவித்து அந்நாளை அரசு சார்பில் விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.



