
திருப்பத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதா் பரபரப்பு.!
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தாதவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இதனை கண்ட பெற்றோர் மாணவர்கள் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினர்.
பின் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களிடம் இது முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இசம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி,
இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதனால் அப்பகுதியல் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.