முதலிரவு என்றாலும் முதலில் கிரிக்கெட் தான்! பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்!

Published:

pak cri fan 1 - 2026

கிரிக்கெட்-என்ற சொன்னாலே எல்லாவற்றையும் விட்டு விட்டு அதில் மூழ்கி போக தயாராக இருக்கும் ரசிகர்களைக் கொண்டது கிரிக்கெட் விளையாட்டு.

அப்படி ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், கிரிக்கெட் பார்த்துக்கொண்டே தனது திருமணச் சடங்குகளில் பங்கேற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணியுடன் T-20 போட்டிகளிலும் டெஸ்ட் தொடர்களிலும் விளையாடி வருகிறது.

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் T-20 போட்டி மழையின் காரணமாக நின்றுபோன நிலையில், இரண்டாவது T-20 போட்டி கடந்த 5-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைச் சேர்த்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
pak cri fan - 2026

இந்தநிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் தஸ்லீம் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகரின் திருமணம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
ஹசனுக்கு கிரிக்கெட் பார்க்காமல் திருமணச் சடங்குகளில் அரைமனதாகப் பங்கேற்க விருப்பமில்லை. எனவே, மணமகளுடன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே திருமணச் சடங்குகளில் பங்கேற்றுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைத் தனது இணையத்தில் பகிர்ந்த ஹசன் தான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும் எப்போதும் மேட்ச் பார்ப்பதைத் தவறவிட்டதில்லை என்றும் தனது திருமண இரவாக இருந்தாலும் கிரிக்கெட் பார்ப்பதைத் தவற விடமாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ட்விட்டர் பக்கத்தில் ஹசனின் போஸ்ட்டைப் பகிர்ந்து அமெரிக்க கிரிக்கெட் ரசிகரிடம் ஒரு மெசேஜ் வந்துள்ளது' எனப் பதிவிட்டுCouple Goals’ ஹேஷ்டேக் மூலம் வாழ்த்துச்செய்தியைத் தெரிவித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img