spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்…விளைவுகள். உண்மைகள்~ பகுதி 4

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்…விளைவுகள். உண்மைகள்~ பகுதி 4

- Advertisement -

சமஸ்கிருதம் அமிர்த மொழி. இறந்த மொழி அல்ல.

கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் செய்த, செய்து வரும் தீய பிரசாரங்கள், அவற்றால் விளைந்த நஷ்டங்கள், உண்மைகள் பற்றி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளும் முயற்சியின் பகுதியாக சென்ற மூன்று பாகங்களாக சம்ஸ்கிருத மொழி மீது நிகழ்ந்த…. நிகழ்ந்து வருகிற அநியாயங்களை பற்றி அறிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியே இந்த நான்காம் பகுதியின் முத்தாய்ப்பு.

பிரிட்டிஷாரின் கோரப்பற்களில் இருந்து வெளிவந்த பின், சம்ஸ்கிருத மொழி செக்யூலரிஸம் என்ற அரக்கனின் கைப்பிடியில் சிக்கியது.

‘மொழி’க்கு மதம் என்ற நிறம் பூசுவது சம்ஸ்கிருத விஷயத்தில் நடந்தது. அதன் மூலம் நம் நாடு இழந்தவை அதிகம்.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் முதலான நூல்களில் உள்ள தனி மனித மேம்பாட்டு பாடங்களிலிருந்து சில தலைமுறைகள் விலக்கி வைக்கப்பட்டன. எமர்ஜென்சி நாட்களில் அரசியல் அமைப்பிற்குள் நுழைக்கப்பட்ட இந்த செக்யூலரிஸம் என்ற கொடிய ராட்சசி இந்திய தேச எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளித்து உதவிக் கரம் நீட்டுகிறது.

விழுமியங்கள் அற்ற கல்வி முறையாலும் விழுமியங்களை விட்டு நீங்கிய திரைத்துறை, பிற ஊடகங்கள் மூலமும் இளைய தலைமுறைக்குள் தீமைகள் நுழைந்தன.

ஆயிரக்கணக்கானோர் தற்கொலையில் இறங்கினர். அதேபோல் பாலியல் வன்முறைகளிலும் படுகொலைகளிலும் ஈடுபட்டனர். வெறி பிடித்தலையும் இந்த நாகரீகத்தின் தீய பலன்கள் பலவற்றை இன்னும் பார்க்கப் போகிறோம்.

சம்ஸ்கிருத மொழியை விட்டு விட்டதால்தான் இந்த நிலைமை.

சமஸ்கிருதத்தின் மீது அரசியல் கொடு நிழல் விழுந்தது. சம்ஸ்கிருத துவேஷம் என்பது பிரிட்டிஷாரிடம் இருந்து நம் தலைவர்களின் மூளைக்குள் நுழைந்தது.

சுதந்திர போராட்ட காலத்தில் அனைவரும் சுதந்திரம் வந்தவுடன் சொந்த மொழிக்கும், சொந்த நடை உடைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நாட்டின் தோற்றத்தை கனவு கண்டார்கள்… ஆசைப்பட்டார்கள். ஆனால் விதி வக்கிரம் செய்தது.

அரசியல் சட்டத்தை அமைத்தவர்களில் சிலருடைய யோசனைகள் எடுபடவில்லை.

1949 ஆம் ஆண்டில் அக்டோபர் 11-ஆம் தேதி முக்கியமான பத்திரிகைகளின் தலைப்பு “பாரத தேசத்திற்கு சம்ஸ்கிருதம் அரசு மொழியாக போகிறது” என்பது. அப்போதைய நீதித்துறை அமைச்சர், அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுள் ஒருவரான பி ஆர் அம்பேத்கர், மற்றுமொரு அமைச்சர், டாக்டர் பிவி கேஸ்கர், நஜீர் அஹமத் சேர்ந்து வெளியிட்ட அறிவிப்புகள் பலருக்கும் ஆனந்தத்தை அளித்தன.

ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது வேறொன்று. அப்போதைய பாரத தேச எதிர்ப்புத் தலைவர்களின் தலையீட்டால் பற்றவைக்கப்பட்ட “சம்ஸ்கிருத மொழி வெறுப்பு” என்னும் தீ இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது.

2019 ல் செக்யூலர் நோய் பிடித்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று போட்டார். அதைக் கேட்டால் நமக்கு வியப்பு ஏற்படும். கேந்திரிய வித்யாலயங்களில் மாணவர்கள் சொல்லும் பிரார்த்தனையில் இரண்டு சமஸ்கிருத மந்திரங்கள் செக்யூலரிசத்துக்கும் இந்திய அரசியல் அமைப்புக்கும் எதிராக உள்ளன என்பது அந்தப் புகார்.

இந்த வழக்கைப் பதிவு செய்தவர் படிப்பறிவு இல்லாதவர் அல்ல. களிம்பேறிய வேற்று பிற மதத்தவரும் அல்ல. விநாயக் ஷா என்ற அட்வகேட். ஜபல்பூரில் வசிப்பவர். அந்த பொதுநலவாதி மறுப்பு தெரிவித்த அந்த சமஸ்கிருத மந்திரங்கள் என்ன தெரியுமா?

அசதோ மா சத் கமய தமாசோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர் மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

சஹனா வவது சஹனௌ புனக்து சஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவநீத மஸ்து மா வித்ய ஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

யாரோ அஞ்ஞானி செய்த இந்த அறிவற்ற புகாரை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளத் தேவையில்லைதான். ஆனால் இது ஏதோ மேட்ச் பிக்ஸிங் போல் உள்ளது. ஏற்றுக்கொண்டார்கள். பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள் போலும்.

ஜஸ்டிஸ் நாரிமன் என்ற நீதிபதி இந்த வழக்கு வழக்கை,” மிக அடிப்படையானது… மகத்தானது…” என்று எண்ணினார். இந்த அரசின் தரப்பில் ஸ்ரீதுஷார் மெஹதா (சொலிசிட்டர் ஜெனரல்) மிக அற்புதமாக வாதிட்டார். கோர்ட்டில் போராடினார்.

இந்த இரண்டு மந்திரங்களின் பொருளையும் விளக்கினார். உலகனைத்தையும் அரவணைக்கும் உண்மைகள் சம்ஸ்கிருத மொழியில் இருப்பதால் அதற்கு மதம் என்ற நிறம் பூசுவது அநியாயம் என்றார். பாரத நாட்டு ஞானச் செல்வமான உபநிஷத்துகளுக்கு மதம் என்ற வண்ணத்தைப் பூசினால், சுப்ரீம் கோர்ட்டின் லட்சிய வாக்கியத்தின் நிலை என்ன? என்று வினா எழுப்பினார்.

கோர்ட் வாயடைத்துப் போனது. சுப்ரீம் என்று அழைக்கப்படும் கோர்ட் ஹாலில் “யதோ தர்மஸ்ததோ ஜய:” என்ற மகாபாரத வாக்கியம் இருப்பதை மறந்து விட்ட அந்த நீதிபதி எச்சில் விழுங்கினார்.

Hinesty is the best policy என்று ஆங்கிலத்தில் கூறினால் அது மதம் ஆகுமா என்று புத்திசாலித்தனமாக சொலிசிட்டர் ஜெனரல் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் விழித்தார் நாரிமன்.

“இதனைத் தீர்க்க பெரிய பெஞ்சுக்கு மாற்ற வேண்டும்” என்று கூறித் தப்பித்துக் கொண்டார்.

இவ்விதமாக பள்ளிகளில் செக்யூலரிஸம் பெயரால் எதுவும் கற்பிக்க இயலாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு தெய்வபக்தி, தேசபக்தி, நீதி, நேர்மை, விழுமியங்களை கூறமுடியாமல் செக்யூலரிஸம் என்ற பெக்யூலரிசம் அச்சுறுத்துகிறது.

Max Muller Macauly என்ற மூன்று M கள் அப்போது இருந்தன.

Missionaries, Marxists, Mullahs என்ற மூன்று M கள் இப்போது உள்ளன. இவை அமரபாரதிக்கு எதிர்ப்பு கீதங்கள் பாடி கொண்டே இருக்கின்றன.

மதங்கள் பிறக்காத போது எழுதப்பட்டவை மத நூல்களாக அழைக்கப்படுவது இவர்களின் குயுக்தியாலேயே!

மொழிகளுக்கு மதம் என்ற நிறம் பூசியதோடு ஆரிய, திராவிட என்ற வினோத கற்பனை சித்தாந்தத்தையும் ஒட்டிவிட்டார்கள். தென்னிந்தியாவின் மொழிகளான கன்னடம் மலையாளம் தெலுங்கு மொழிகளில் 80 சதவிகிதம் சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன. தமிழ் மொழியில் 40 சதவிகிதம் சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன.

இதிலும் வந்தேறிகளின் தீவிரமான சூது மறைந்துள்ளது. ஆங்கில இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பிஷப் கால்டுவெல் இந்தக் குள்ளநரி தந்திரத்தின் சூத்திரதாரி. நாடெங்கும் ஒரே மொழியாக சம்ஸ்கிருதத்தையோ ஹிந்தியையோ வைப்பதற்கு நடக்கும் முயற்சிகளுக்கு தடைபோடும் முயற்சிகளை ஆரம்பித்து வைத்த தீயவன் கால்டுவெல்.

மொழிகளின் ஆதாரமாக திராவிடம் என்ற சொல்லை உருவாக்கினான். மொழியியல் என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினான். ‘கருப்பினத்தவர் சித்தாந்தம்’ என்ற பெயரில் உலகெங்கும் இருந்த பல தன்னார்வ அமைப்புகள் இந்தியாவில் நெருப்பைப் பற்ற வைத்தன. சுதந்திரத்திற்கு முன்பு முளைவிட்ட இந்த விதை இப்போது விஷ விருட்சமாக வளர்ந்துள்ளது.

மேற்கு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ், சம்ஸ்கிருதம் இவற்றை வேற்றுமைப் படுத்தும் முயற்சிகள் ஆரம்பித்தன. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட |SARVA (South Asia Residual Vocabulary Assemblage) என்ற அமைப்பு தேசிய நலனை சர்வநாசம் செய்வதை இலக்காகக் கொண்டு பணிபுரிகிறது.

திரு. ராஜீவ் மல்ஹோத்ரா, இவர்களின் ரகசியங்களைப் போட்டு உடைத்தார்.

மாரீசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் 35 ஆண்டுகளாக நடந்துவரும் செமினார்களும் கூட்டங்களும் சம்ஸ்கிருதம், தமிழ் இவற்றை வேற்றுமைப்படுத்தி நீக்குவதற்காகவே நடக்கின்றன.

இதன் பலனாக விடுதலைக்குப்பின் கூட ஆங்கிலத்திற்கே முதல் பீடம் அளிக்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் பொறியில் விழுந்த பெரியார் ராமசாமி போன்றோர் செய்த செயல்களின் பலனை இன்றும் அனுபவித்து வருகிறோம்.

ஒரு குஜராத்திகாரர் ஹிந்தி இணைப்பு மொழியாக பயன்படும் என்று கூறினால், அதனை எதிர்ப்பவர்களுக்கு புரிய வேண்டியது ஒன்று உள்ளது.

பிராந்திய மொழிகளை கடிக்காமல் விழுங்கும் மலைப்பாம்பு ஆங்கில மொழியே! சம்ஸ்கிருதமோ ஹிந்தியோ அல்ல!

சமஸ்கிருதத்தின் பக்கம் ஆர்வத்தோடு பார்த்தால்…

கடந்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகளாக கம்ப்யூடர் விஞ்ஞானிகள் சம்ஸ்கிருத மொழியை கம்ப்யூட்டரில் சேர்க்கும் பரிசோதனைகளை செய்து வருகிறார்கள்.

ராஜபாஷையை கம்ப்யூடரில் சேர்க்கும் பணிக்கு சம்ஸ்கிருதம் உதவும் என்று அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

1985இல் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ரிக் ப்ரிக்ஸ் என்ற விஞ்ஞானி தன் கட்டுரையில் இது பற்றி விளக்கியுள்ளார். செயற்கை மூளை (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்), சொற்பொருள் (வேர்ட் மீனிங்) என்ற செயல்களைக் குறித்து இவர் விவரித்தார்.

சொற்பொருளை சம்ஸ்கிருத மொழியில் “சப்தபோத ப்ரக்ரியை” என்பார்கள். இதனை அமைத்தவர்கள் எப்பேர்பட்ட அறிஞர்கள் என்று கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்து உள்ளார்கள்.

சிறிது காலம் பிடித்தாலும் இந்த ஆராய்ச்சிகள் விரைவில் பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை. பாரத தேச வைபவம் உலகெங்கும் விஸ்தரிக்கும் நாளுக்காக அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறோம்.

இந்தி, சமஸ்கிருத மொழிகளை பிராந்திய மொழிகளில் மாற்றுவதற்கு ஐஐடி கான்பூரில் பாணினியன் பார்சர் என்ற பெயரில் ஆய்வுகள் உற்சாகமாக நடந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் சிரிகெரியில் டாக்டர் சிவாச்சாரிய ஸ்வாமி என்ற பெயர் கொண்ட ஆராய்ச்சியாளர் ‘கனகாஷ்டாத்யாயி’ என்ற செயலை ஸ்திரப்படுத்தியுள்ளார். இதனைக் கொண்டு சொற்களின் வடிவம், வேர்ச் சொல்லின் வடிவம், அமரகோச சொற்கள், பாணினியின் சூத்திரங்கள்…

இவற்றை கம்ப்யூட்டரில் இணைத்து உள்ளனர் . பூனே மற்றும் பெங்களூரில் சி.டாக் நிறுவனம் கூட சம்ஸ்கிருதத்தை கம்ப்யூட்டர்களுக்கு இணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மட்டுமின்றி நார்வே ஜெர்மனி பின்லாந்து பிரான்ஸ் நாடுகளும் சம்ஸ்கிருதத்தின் மீது பார்வையை திருப்பி உள்ளன.

இதற்குத் தேவையான சம்ஸ்கிருத அறிஞர்களை நாம்தாம் அளிக்க வேண்டியிருக்கும். அதற்காக இந்தியர்கள் அனைவரும் சமஸ்கிருத மொழியை கற்பது அவசியம். சம்ஸ்கிருத மொழி பேசுவதில் திறமையை வளர்த்துக் கொள்வதும் அவசியம்.

முத்தாய்ப்பாக…

சம்ஸ்கிருத மொழி பரவுதலுக்கும், சம்ஸ்கிருத பிரச்சாரம் மற்றும் ஒலி பரப்புதலுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம்.

“சம்ஸ்கிருதத்தின் சிறப்பு குறித்து பேசியது போதும். இனி சமஸ்கிருதத்தில் பேசுவோம்!” என்று சம்ஸ்க்ருத பாரதி பிரச்சாரம் செய்கிறது.

அவர்கள் நடத்தும் முகாம்கள், ஆய்வு நூல்கள் மூலம் சம்ஸ்கிருதத்தை கற்போம். சம்ஸ்கிருதம் பேசுபவரை உற்சாகப்படுத்துவோம்.

தெலுங்கு, தமிழ் போன்ற பிராந்திய மொழிகள் பேசும் போது வெளிப்படும் ஆங்கிலப் பதங்களுக்கு பதில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவோம்.

சம்ஸ்கிருத மொழி என்ற அமிர்தத்தைப் பருகுவோம்! இறவாநிலை எய்துவோம்!

ஜெய் சம்ஸ்கிருதம்! ஜெயது பாரதம்!!

  • தெலுங்கில் – பி எஸ் சர்மா.
    தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்.
    (Source: ருஷி பீடம் ஆன்மீக மாத இதழ் நவம்பர் 2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe