தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, இதனை கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், கேரளத்தை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.