முகமூடிகள், கை உறைகள் சுத்திகரிப்பான்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது அரசு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
Personal Protection Kit - 2026

கொரோனா வைரஸ் தாக்கம், மக்களுக்கு அதன் மீதான அச்சம் ஆகியவற்றின் காரணத்தால், கையுறைகள், மாஸ்க்கள் -முகமூடிகள், கை சுத்திகரி்ப்பு திரவம் உள்ளிட்டவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. பல இடங்களில் இருப்பு இல்லாத காரணத்தால், மக்கள் இவற்றைப் பெறுவதில் திண்டாட்டத்தை சந்தித்தனர். பெரும்பாலான விற்பனையாளர்களிடமும் சரக்குகள் இல்லாத நிலையில், தட்டுப்பாட்டை பயன்படுத்தி பன்மடங்கு விலை கொடுத்து பொதுமக்கள் இவற்றை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டனர்.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955ன் கீழ் இவற்றிக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்த சட்டத்தின் கீழ் ஒரு ஆலோசனையையும் வெளியிட்டுள்ளது. உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, மாநிலங்கள் இந்த பொருட்களின் உற்பத்தி அளவை மேம்படுத்தவும், விநியோகத்தைச் சீராகவும் வைக்க முடியும், அதே நேரத்தில் இந்த சட்டத்தின் கீழ் எம்.ஆர்.பி-யில், அதாவது பொருளுக்கான குறிப்பிடப் பட்டிருக்கும் அதிக பட்ச விற்பனை விலையில் விற்பனை செய்வதை மாநிலங்கள் உறுதிப்படுத்த முடியும்.

இப்போது முகமூடிகள், கையுறைகள் இவற்றின் மீது, மாநிலங்கள் தங்கள் அதிகாரபூர்வ கட்டுப்பாட்டை அறிவிக்கலாம்! அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

அத்தியாவசிய பொருள்கள் (எசன்ஷியல் கமாடிட்டீஸ் – ஈசி) சட்டத்தின் கீழ், 1972 முதல் 1978 வரையிலான காலப்பகுதியில் மத்திய அரசின் அதிகாரங்கள் ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, மாநிலங்கள் / யூ.டி.க்கள், குற்றவாளிகள் மீது ஈசி., சட்டம் மற்றும் பிபிஎம்எம்எஸ் ஈசி., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் மற்றும் பிபிஎம்எம்எஸ் இசி சட்டத்தின் கீழ், அவரை அதிகபட்சம் 6 மாதங்கள் கைது செய்து வைக்க முடியும்.

 முகமூடிகள் (2 பிளை & 3 பிளை அறுவை சிகிச்சை முகமூடிகள், என் 95 முகமூடிகள்) மற்றும் கையுறை சுத்திகரிப்பாளர்களின் உற்பத்தி, தரம், விநியோகம் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பை சீராக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த முடிவு பயனுள்ளதாகும்.

ஊக வணிகர்கள் மற்றும் அதிக விலை நிர்ணயம், பிளாக் மார்க்கெட்டிங் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

நுகர்வோர் புகார்களை பதிவு செய்வதற்கு மாநில ஹெல்ப்லைன்கள் குறித்து விளம்பரம் வழங்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நுகர்வோர் இந்த விஷயத்தில் தங்கள் புகார்களை தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000, ஆன்லைன் புகார்கள்: www.consumerhelpline.gov.in,
www.consumeraffairs.nic.in, dsadmin-ca@nic.in and dirwm-ca@nic.insecy.doca@gov.in. – இவற்றை அணுகலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.