spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க: ஆர்.பி. உதயகுமார்!

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்க: ஆர்.பி. உதயகுமார்!

- Advertisement -
rb udayakumar
rb udayakumar

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளை பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் பேட்டியளித்தார்

மதுரை புறநகர் மேற்கு கழக மாவட்டம் ‌ பேரையூர் பேரூர் கழகத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்க்கு செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்

மற்றும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,மாவட்டக் கழகப் பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, பேரையூர் பேரூர் கழகச் செயலாளர் நெடுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது…

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில். 1,98,000 கூடுதலாக வாக்கு பெற்று இருந்தால் 3 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று ஹாட்ரிக் சாதனை படைத்திருப்போம்

சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை மக்களின் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று அரசிடம் கேட்டால் அதை திசை திருப்பும் வண்ணம் நம் மீது வழக்கு போட்டு ஜனநாயக குரல் வளையை அரசு நெரிக்கிறது மக்கள் உரிமைக்காக நாம் போராடினால் வழக்கு என்றால் ஆயிரம் முறை மக்களுக்காக நாம் போராடுவோம்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது அதில் அதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் ஆகவே கடுமையாக களப்பணியாற்றி 100 சதவீதம் வெற்றியை கழகத்திற்கு ஈட்டி தந்து அதை நாம் கழகத்தின் பொன்விழா பரிசாக கழக ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்க வேண்டும் என்று பேசினார்

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள்யிடம் கூறியதாவது…

இந்தியாவில் 41 கோடி பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர், வாட்ஸ்அப்பை 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், யூடிப்பை 45 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், லிங்க்இன்னை 6.5 கோடி பேர் பயன் பயன்படுத்துகின்றனர், அமேசான் பிரேமை 4 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், டிவிட்டரை 1.75 கோடி பேர் பயன்படுத்துகின்றனர், நெட்பிக்ஸ் 30லட்சம் பயன்படுத்துகின்றனர் அந்தளவுக்கு இணையதள தொடர்ப்பு மக்களை ஊடுடவி உள்ளது

குறிப்பாக ‌‌‌‌‌17 கோடி பேர் டிக்டாக் செயலியில் இருந்தனர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டில் அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் இதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து மத்திய அரசு தடை செய்தது

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இளைஞர்கள் தங்கள் பணத்தை இழந்து தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர் அதனை கருத்தில் கொண்டு அப்போது அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் அதனை தடை செய்தார்

அதேபோல் சிறுவர்கள் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாக உள்ளது என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததின் பேரில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் அதனை தொடர்ந்து பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கடந்த ஆண்டு மத்திய அரசு தடை செய்தது

தற்போது சிறுவர்களை பாதிக்கும் ப்ரீபயர் போன்ற ஆன் லைன் விளையாட்டு பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இந்த ப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe