வரதட்சணை கொடுமை: இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

Published:

susaid
susaid

திருமணமான 8 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பனையூர் பகுதியில் பிரமோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரமோத் சினேகாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் சினேகா கோபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பிறகும் செல்போன் மூலம் சினேகாவை தொடர்பு கொண்ட பிரமோத் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சினேகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து சினேகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரமோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img