இந்து பெயரிலான அரசுப் பள்ளி…திடீரென ஆர்.சி. கிறிஸ்துவப் பள்ளியான ‘விடியல்’ விநோதம்!

Published:

hindu school named chritian1
hindu school named chritian1

தென்காசியில் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது! இந்து நடுநிலைப்பள்ளி ஒன்று ஆர்சி கிறிஸ்துவ நடுநிலைப் பள்ளியாக மாறிய திடீரென மாறிய விசித்திரச் செய்தி சமூகத் தளங்களில் வைரலாகி வருவதால் தென்காசி மாவட்டம் மீண்டும் ஒரு பேசுபொருளாகியுள்ளது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே துத்திகுளத்தில் பல வருடங்களாக அரசு இந்து நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திடீரென சில நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் என்பவர் பள்ளியின் பெயரை ஆர்சி நடுநிலைப்பள்ளி என மாற்றியதாக தகவல் வெளியானது.

இது குறித்து அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் சிலர், அவரை வாட்சப்பில் தொடர்பு கொண்டு, எப்போது இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.? ஏதேனும் அரசு அறிவிப்பு வந்ததா..? என கேட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியரிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

hindu school named chritian
hindu school named chritian

இந்த சம்பவம் உள்ளூர் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. ஏற்கெனவே கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் போட்ட பிச்சையில் தான் விடியல் அரசு ஆட்சிக்கு வந்ததாக அவர்களே மேடை போட்டு முழங்கிக் கொண்டு இருப்பதும், அது குறித்து ஆளும் தரப்பு எந்த மறுமொழிகளும் சொல்லாமல் மௌனமாக ஏற்றுக் கொண்டிருப்பதும் தமிழகத்தில் நடுநிலை வாக்காளர்களை பெரிதும் வருத்தத்தில் தள்ளியுள்ளது.

மேலும், கிறிஸ்துவ இஸ்லாமிய இரு தரப்பு சார்ந்த அமைச்சர்களின் பேச்சும் இந்தச் சண்டைக்கு தூபம்போட்டு விடுவது போல் அமைந்திருப்பதால் சமூகத் தளங்களில் இந்த விவகாரம் பெரிதும் அலசப் பட்டு வருகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதற்கு அச்சாரம் இடுவது போல், தமிழக அரசும் கல்வித் துறை, பாட நூல் கழகம் போன்றவற்றில், பாதிரிகளையும் கிறிஸ்துவ அமைப்பினரையும் தலைமைப் பொறுப்பிலும் உறுப்பினராகவும் நியமித்து வருவதால், விடியல் அரசு நமக்கானது இல்லை என்ற எண்ணம் இந்துக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், இந்துப் பெயரில் இயங்கிய அரசுப்பள்ளி ஒன்று, ஆர்.சி. பள்ளி என அமைதியாக மாறியிருப்பதால், சமூகத் தளங்களில் இது குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு தீர்வு காணாவிட்டால், பெரும்பான்மை மக்கள் குற்றம் சாட்டுவது போல் விடியல் அரசு சிறுபான்மையினர் ஓட்டுப் பிச்சை அரசு என்றே உறுதி செய்யப் படக்கூடும்!

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img