cricket - 2026

கிரிக்கெட் ஆடும் போது மைதானத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!

விளையாட்டு உலகம் சற்றுமுன்
cricket - 2026

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது

ஜிம்பாப்வே மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் ஜிம்பாப்வே அணி விளையாடியது ஆட்டத்தின் ஆறாவது ஓவரை ஐயர்லாந்தின் ஹம்பஹரேஸ் வீசினார்.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொள்ள காத்திருந்தார் ஜிம்மபவே அணியின் பேட்ஸ்மேன் பென்னட்.

பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவந்த போது லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது இது கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்த கேமிராவில் பதிவானது.

வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களும் இந்த நில நடுக்கத்தை உணர்ந்தாகவும் தங்களுக்குப் பின்னால் ஏதோ ரயில் போனது போல் உணர்ந்ததாகவும் கூறினர்.

ஓரிரு வினாடிகள் நீடித்த இந்த நிலஅதிர்வால் போட்டி எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.