
ஸ்மார்ட்போன் யுகத்தில் உலகின் ஏதோ ஒருமூலையில் விலங்கு செய்யும் குறும்புத் தனங்கள், நொடிப்பொழுதில் வீட்டில் இருந்தவாறே நம்மிடம் இருக்கும் கையடக்கக் கருவிக்குள் பார்த்துக் கொள்கிறோம்.
அப்படியான வீடியோ ஒன்று டிவிட்டர் வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. AmazingNature என்ற பக்கத்தில் இருக்கும் வீடியோவில் ஏரி ஒன்றில் இருக்கும் வாத்துகள் செய்யும் சேட்டை அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், தண்ணீரில் நீந்திச் செல்லும் வாத்து ஒன்று தலையை மடக்கி, போக்கு காட்டுகிறது. நீங்கள் பார்த்தால் இது என்ன? புதுமையான ஸ்டைலில் வாத்து தலையை மடக்கி வைக்கிறது என நினைப்பீர்கள்.
பின்னர் தண்ணீருக்குள் மூழ்கி எழும் வாத்துடன், இன்னொரு வாத்தும் சேர்ந்து கொள்கிறது. மகிழ்ச்சியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் இரண்டு வாத்துக்களும் ஜோடி சேர்ந்து அழகான நடனத்தை அரங்கேற்றுகின்றன.
தண்ணீரில் மிந்தது கொண்டு, கழுத்துகளை மடக்கியவாறு நீர்மேல் குதித்து குதித்து செய்யும் சேட்டை காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது.
Do you Dance with me pic.twitter.com/Vb0ZCSA7Gr
— Amazing Nature (@AmazingNature00) January 28, 2022