வாகா எல்லையில் அபிநந்தன்! வரவேற்கக் குவிந்த இந்தியர்கள்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

waga border welcoming abhinandan - 2026

வாகா எல்லையில் இந்திய விமானி அபிநந்தன் வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்திலிருந்த விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார்.

பின்னர் அவர் பாகிஸ்தான் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரைக் காயப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோ மற்றும் அவருடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பேசும் வீடியோ ஆகியவை சமூக ஊடங்களில் வெளியாகியது.

இதைத் தொடர்ந்து இந்தியா அவரை ஒப்படைக்குமாறு எச்சரித்தது. உலக நாடுகள் பலவும் அதற்கு ஆதரவு அளித்தன.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுதலை செய்வதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து தற்போது விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய எல்லைக்குள் வந்தடைந்துள்ளார்.

இதை இந்திய மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். வாகா எல்லை முழுவதும் மக்கள் கூட்டம் உற்சாகமாகக்  கூடியுள்ளது.  அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் நடைபெறவிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தையும், மக்களையும் சந்திக்க இருக்கிறார். ’’என்னை நீ கொல்ல முடியும்! வெல்ல முடியாது! என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய அபிநந்தன் தற்போது தாய் மண்ணில் நின்று கொண்டிருக்கிறார்.

முன்னதாக, லாகூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய- பாக் எல்லையான வாகாவுக்கு சாலை மார்க்கமாக வந்தடைந்தார் அபிநந்தன். அவரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் வாகாவில் குவிந்தனர்.  இதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் விங் கமாண்டர் அபிநந்தன்! வாகா எல்லையில் அபிநந்தன் வருகையை ஆடி, பாடி மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.