
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஒரு ஆண் பாம்பு மற்றும் ஒரு பெண் பாம்பைப் பற்றியது. இரு பாம்புகளும் காதல் யவப்பட்டு தங்களை மறந்த நிலையில் உள்ளன. இந்த அற்புதக் காட்சியை அவ்வழியே சென்ற ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வெளியாகி நீண்ட நாட்களாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும். நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு அதிக லைக்குகளை அளித்து வைரல் ஆக்கியுள்ளனர்.
சில நொடிகளே உள்ள இந்த வீடியோ ஒரு சமவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் ஏழடி நீளமுள்ள பாம்புகள், அடர்ந்த புதர்களில் இருந்து ஒரு மைதானத்துக்கு வருகின்றன. மைதானத்தில் வந்த உடனேயே, அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துகொள்கின்றன.
ஒரு பாம்பு (Snake) தனது தலையை மற்ற பாம்பின் முகத்தில் வைக்க முயற்சி செய்கிறது. மற்ற பாம்பும் பின் அதையே செய்வதைக் காண முடிகின்றது.
இந்த காட்சி பார்க்கத் தகுந்ததாக உள்ளது. எனினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, பாம்புகளின் இயல்பு திடீரென மாறி, ஒரு பாம்பு மற்றொரு பாம்பை கடிக்க முயல்வது தெரிகிறது.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமிலும் snake._.world என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.