இந்தியாவிற்கு எதிரானவர்களை நாட்டை விட்டே துரத்துங்கள்: இயக்குனர் பேரரசு!

சற்றுமுன்
perarasu
perarasu

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்திய நாட்டிற்கான பெரும் இழப்பாகவும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பலருக்கு கொண்டாட்டத்தை கொடுத்து உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிகழ்விற்கு சமூக வலைதளங்களில் ஸ்மைலி போட்டும், தண்டனை எனவும் பதிவிட்ட பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து வேறெறுக்க வேண்டும் என்பது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களின் ஆதங்கமும் கோபமும் உள்ளக்குமுறலுமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை‌‌.

உண்மையை பதிவிடும், கடமையை தோலுரிக்கும், சமுக ஆர்வலருக்கு இல்லாத கருத்து சுதந்திரம், நியூஸ் மீடியாக்களிலே பகிரங்கமாக இது போன்ற விஷயங்களுக்கு, நாட்டிற்கு எதிரான சந்தோஷ கருத்துக்களை தெரிவிக்கும் இவர்களுக்கு, கருத்து சுதந்திரம் இருப்பது ஆச்சரியமான விஷயம். இதனை அந்தந்த நியூஸ் சேனல்கள் கவனித்து வெட்டவெளிச்சமாக்கும் கடமைகளை மறந்து திரித்தும் ‘திரிப்பதுமே’ கண்ணென நடப்பதுவும் வெட்கக்கேடு.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில்,

நம் நாட்டில்
ஒரு கட்சிக்கு எதிரா
கோடி பேர் இருக்கலாம்!
மதத்திற்கு எதிரா
கோடிப்பேர் இருக்கலாம்!
மொழிக்கெதிரா, ஜாதிக்கு எதிரா
பல கோடிப்பேர் இருக்கலாம்
ஆனால்
நம் இந்தியாவிற்கு எதிரா
ஒரு பய இருக்கக் கூடாது!
அவர்களை கண்டறிந்து
இந்த நாட்டைவிட்டே துரத்துவது
அரசின் கடமையாகும்!
ஜெய்ஹிந்த்

  • என்று பதிவிட்டிருக்கிறார்.
ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!
https://twitter.com/ARASUPERARASU/status/1468840140017520640?ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.