October 12, 2024, 9:55 AM
27.1 C
Chennai

மணமகனின் கன்னத்தில் 2 முறை.. மேடையிலே மணமகள் செயலால் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் மணமகனை மணமகள் கன்னத்தில் பளார் என அறை விட்ட சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்தக்கால திருமணங்கள் உறவினர்கள் முன்னிலையில் தலைகுனிந்தபடி மணமகள் வர மணமகன் கழுத்தில் தாலி கட்ட நடைபெறும். ஆனால் தற்போது ஹெலிகாப்டரில் மணமகள் வந்து இறங்குவது , துணை நடிகர்கள் புடைசூழ நடனமாடி வருவது, தண்ணீருக்கு அடியில் தாலி கட்டுவது என பல வித்தியாசமான முறையில் நடைபெற்று வருகின்றன.

ப்ரீ வெட்டிங் ஷூட் எனப்படும் திருமணத்துக்கு முந்தைய போட்டோ எடுக்கும் கலாச்சாரமும் தற்போது பரவி வருகிறது. அவ்வாறான ஒரு திருமணத்தின் போது மணமகள் மணமகனின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று இளம் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர்.

அத்தனை பேர் முன்னிலையில் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியளிக்கும் வகையில் மணமகள் மணமகனின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளோடு நின்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ALSO READ:  தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

மணமகன் மணப்பெண்ணுக்கு மாலையை அணிவிக்கும் போது, ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

இதனால் மணமகன் உட்பட அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற நிலையில் மணமகள் வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.

உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது. அங்கு திருமணத்தில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் வந்திருந்தனர். அத்தனை பேருக்கும் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த வீடியோ @Benarasiyaa என்ற ட்விட்டர் கணகில் பகிரப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, மணமகள் ஏதோ கோவத்தில் இருந்தார் என தெரியவந்துள்ளது.

அவர் மணமகனை அடித்ததையடுத்து அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் போலீசார் மற்றும் குடும்பத்தினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சிறிது நேரம் கழித்து திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வீடியோ வைரலாகி, சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உண்ணன. சிலர் இதைப் பார்த்து சிரித்தாலும், பலர் மணமகள் மணமகனை அறைந்திருக்கக் கூடாது என்றே கூறுகின்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானின் பயங்கரவாதம் வெற்றி பெறாது: கார்கில் வெற்றி தினத்தில் மோடி உரை!

ஒரு பயனர், ‘திருமணம் பிடிக்கவில்லை என்றால், கட்டாயத் திருமணம் செய்ததற்காக அவர் பெற்றோரை அறைய வேண்டும், அந்த மணமகன் என்ன செய்வான்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர், ‘அந்த பெண் செய்தது பெரிய தவறு. அவர் மீது மான நஷ்ட வழக்கே போடலாம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஏராளமான லைக்குகளும், வியூஸ்களும் கிடைத்து வருகின்றன.

மணமகனை பிடிக்கவில்லையா அல்லது வேறு எதுவும் காரணமா என தெரியாத நிலையில் இது குறித்து தகவல் உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள்ளாகவே அங்கிருந்த உறவினர்களுக்குள் அடிதடியும் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ:  ஒரே அக்கவுன்டில் 2 பேர் UPI பயன்படுத்தலாம்; விரைவில் அறிமுகமாகிறது!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week