mathapothakar - 2026

திருமணம் செய்வதாக கூறி 2 முறை கருக்கலைப்பு.. மதபோதகர் மீது இளம்பெண் புகார்!

சற்றுமுன் கிரைம் நியூஸ் தமிழகம்
mathapothakar - 2026

திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி கர்ப்பமாக்கினார். என மதபோதகர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற அந்தப் பெண் அளித்துள்ள புகார் மனுவில், ”நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன்.

நான் சில ஆண்டுகளுக்கு முன்னதாக காஞ்சிக்கோவில் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு சென்று வருவேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த இருபத்தி ஆறு வயது இளைஞருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

நல்ல பழக்கம் இருந்ததால் அவர் ஒருநாள் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அழைத்ததால் நான் அவருடன் சென்றேன். ஆனால் வீட்டிற்கு சென்றதும் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். 2017ஆம் ஆண்டில் இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் .

இந்த விவரத்தை அவரிடம் சொன்னபோது நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் இப்போது அதற்கு சரியான நேரம் இல்லை. அதனால் இந்த கர்ப்பத்தை கலைத்து விடலாம் என்று என்னை சமாதானப்படுத்தி சேலத்திற்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார் .

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அதன் பின்னர் சில மாதங்கள் கழிந்தன. மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால்தான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இப்போதும் இப்போது சரியான நேரம் அல்ல என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி சேலத்திற்கு அழைத்துச் சென்று என்னை மனைவி என்று டாக்டர்களிடம் அறிமுகப்படுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதற்கு அவரின் தந்தை உடந்தையாக இருந்தார்.

அதன் பின்னர் அவரிடம் சென்று திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர் வேதம் படித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று விட்டார். இப்போது அவர் மதபோதகராக திரும்பி வந்திருக்கிறார்.

அவரிடம் போய் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் இப்போது மதபோதகர். அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார் இதனால் அவர் மீதும் கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.