நோட்டாவுல பாஜக.,வை தேடுறது இருக்கட்டும்… மய்யத்துல இருக்குறத தேடுறதுக்குதான் கமலுக்கு டார்ச் லைட்டே..!

மக்கள் நீதி மய்யத்துக்கும் பாஜக., நோட்டாவுக்கும் என்ன தொடர்பு?

ஏன் தேவையில்லாமல், கமால்ஹசன் தனக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பெருக்கில் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்? நோட்டாவுக்குள் பாஜக.,வைத் தேட இந்த டார்ச் லைட் என்றால்… இவையெல்லாம் எதற்கு என்று கமல்ஹாசன் சொல்லட்டும்!

தமிழகத்தில் நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த அரசியல் காளான் கமலஹாசன் வரை… பாஜகவை பார்த்து நோட்டாவை ஜெயிக்கவில்லை என்று நக்கலடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரகஸ்பதிகள், பாஜகவிற்கு ஒரு மத்திய மந்திரி இருப்பதை வசதியாக மறைத்துவிட்டு, ஆர்கே நகர் தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவாக ஒட்டு வாங்கியதை மட்டுமே குறிப்பிட்டு, பாஜகவை பார்த்து… “நோட்டாவை ஜெயிங்க”… “நோட்டாவை ஜெயிங்க” – ன்னு அவர்களின் பாஜக விரோத சிரங்கை அடிக்கடி சொறிந்துவிட்டு தற்காலிக சந்தோசம் அடைகிறார்கள்.

சரி, ஆர்கே நகரில் நோட்டாவிற்கு ஒட்டு போட்டவனெல்லாம் பாஜகவை மட்டுமே பிடிக்கவில்லை என்றா நோட்டாவிற்கு ஒட்டு போட்டான்…

அடே, கிறுக்குப்பயலுவலா… அந்த தேர்தலில் நின்ற எந்த கட்சிக்கும் ஒட்டு போட பிடிக்காமத்தான், நோட்டாவிற்கு ஒட்டு போட்டானுங்க…

அந்த தேர்தலில் பாஜகவையும் சேர்த்து 5 கட்சிகள் போட்டியிட்டன… அதுவும் திமுகவிற்கு 18 கட்சிகள் கூட்டணி… இந்த திமுக டெப்பாசிட் கூட வாங்கல… இதை பற்றி எந்த சிரங்குபிடிச்சவனாவது பேசுறானா? பேசமாட்டாய்ங்க… 200 ரூ எப்படி கிடைக்கும்??

நோட்டாவிற்கு விழுந்த 2373 ஓட்டுகளை, ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்ட 5 கட்சிகளுக்கும் சமமா பிரிச்சா… ஒரு கட்சிக்கு 474 ஒட்டு வரும்… இந்த தேர்தலில் பாஜக வாங்கியது 1358 … அப்படின்னா, பாஜக நோட்டாவை விட அதிகமாத்தான் வாக்குகள் வாங்கியிருக்கு…

அதுவும் திமுகவின் 18 கட்சி கூட்டணிக்கும் நோட்டா ஓட்டுகளை பிரிச்சு கொடுத்தோமுன்னா… 22 கட்சிகளுக்கு பிரிக்கணும்… 2373 ஓட்டுகள்… 22 கட்சிகள்…. கட்சிக்கு 107 ஓட்டுகள்…

மத்ததுக்கெல்லாம் புள்ளிவிவரம்… இதுவும் புள்ளிவிவரம் தான்…

௨௦௧௪ பொதுத் தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு சதவீதமெல்லாம் பொதுவெளியில் இருக்கு பாத்து தெரிச்சுக்கங்கடா சிரங்குபிடிச்சவய்ங்களா…

#கார்த்திகேயன் பாண்டியன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...