அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

சற்றுமுன் சென்னை தமிழகம்

dmdk admk - 2026

அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப் பட்டது!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி இயற்கையானது! வெற்றிக் கூட்டணியான இக் கூட்டணி அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் தொடரும்! நாளை நமதே! நாற்பதும் நமதே!! எண்களில் ஒன்றும் கிடையாது, எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது! அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், அதிமுக – தேமுதி கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி! நாளை நமதே, நாற்பதும் நமதே எனும் வகையில் இந்த கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும், அதன் பிறகும் கூட்டணி தொடரும் என்று கூறினார் அவர்.

admkdmdk - 2026

கூட்டணி ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது உணர்வுப்பூர்வமானது! வேட்புமனு தாக்கலுக்கு முன் தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்படும்… என்று கூறினார்.

முன்னதாக, பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக., தமிழகத்தில் தனித்து நின்று 36 எம்பிக்களைப் பெற்றிருந்தும்,. அக்கட்சி மத்தியில் தேசியக் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத காரணத்தால், அக்கட்சியால் தமிழகத்துக்குத் தேவைப்படும் நலன்களைக் கேட்டுப் பெற முடியவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பதில் தேமுதிக இடம்பெறுவது தொடர்பாக இழுபறி ஏற்பட்டது.

அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா, வரமாட்டாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்றார். அதிமுக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., புதியதமிழகம், புதியநீதிக்கட்சி, இடம்பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பதில் தேமுதிக இடம்பெறுவது தொடர்பாக இழுபறி ஏற்பட்டது.

அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரா, வரமாட்டாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்றார். அதிமுக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., புதியதமிழகம், புதியநீதிக்கட்சி, இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.