இந்த ஆண்டு உகாதிலிருந்து சம்பிரதாய உடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே விஜயவாடா கனகதுர்க்கை ஆலயப் பிரவேசம் அனுமதி.
விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை மீது கோவில் கொண்டுள்ள ஸ்ரீ கனக துர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தனம் கோவில் டிஸ்ட் கமிட்டி சேர்மன் பைலா சோமிநாயுடு, சனிக்கிழமை நடந்த கோவில் டிரஸ்ட் கமிட்டி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
துர்கா தேவி ஆலயத்தின் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக கூறினார். திருமலா திருப்பதி தேவஸ்தானம் போல ஆண்கள் வேட்டி அல்லது பேண்ட் அணிந்து வரவேண்டும். பெண்கள் புடவை அல்லது சல்வார் கமீஸ் டிரஸ் அணிந்து வரவேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக கூறினார்.
2020 -21ல் ஆலய மேம்பாட்டுக்காக 178 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு தசரா பண்டிகையை ஆலயத்தில் அரசு நிதியில் நடத்த போவதாக எம்எல்ஏ ராசமல்லு சிவபிரசாத் ரெட்டி தெரிவித்தார்.